செல்வம் செழித்தோங்க” -வெள்ளிக்கிழமைகளில் பாடும் மகாலட்சுமி பாடல் !!

பணத்திற்கு அதிபதியாக விளங்கும் லட்சுமி தேவியார் அனைவருக்கும் பொதுவானவள். இவருக்கு தான் அருள் புரிவேன், இவர்களுக்கு அருள் புரியேன்! என்று ஒரு போதும் சொல்வதில்லை. அவளை வணங்குபவர்கள் யாராக இருந்தாலும், மனமுவந்து உண்மையிலேயே அருள் புரிவாள். அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அதைப் பொறுத்து தான் அவர்களிடம் செல்வமும் எப்போதும் நிலைக்கும்.

மகாலட்சுமியை வணங்கும் முறையும், நம்முடைய நல்ல குணநலன்களும் தான் நமக்கு உரிய பணத்தை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. மகாலட்சுமிக்கு விளக்கு ஏற்றுவது என்பது மிகவும் பிடித்த செயல் ஆகும். விளக்கில் எரியும் ஜோதியில் மகாலட்சுமி இருக்கின்றாள். ஒருவருடைய வீட்டில் பணம் எப்பொழுதும் இருப்பதற்கு தினமும் விளக்கேற்ற வேண்டும். இதனை தான் ஆன்மீக சாஸ்திரமும் கூறியுள்ளது.

தினமும் விளக்கு ஏற்றுபவர் இல்லத்தில் எப்பொழுதும் வறுமை என்பதே இருப்பதில்லை. இந்தp பாடலில் வரும் பொருளை கேட்டால் உங்களுக்கு நன்றாகவே புரியும். தமிழில் கொடுக்கப்பட்டுள்ள இப்பாடலை வெள்ளிக் கிழமை தோறும் பாடினால் உங்களுக்கு மகாலட்சுமி தேவியே வந்து செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை. அப்பாடலைப் பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல் இதோ!

திருவே என் இல்லம் வருவாயே! திருமாலின் தேவி! பங்கஜலோசனி பரம தயாபாரி! கமல மனோஹரி கருணாகரி நீ. எங்கும் திகழும் இனிய பொற்பாதம்
எங்கள் இல்லத்தில் பதிந்திட வேண்டும் பிள்ளைகள் எத்தனை தவறுகள் செய்தாலும் தள்ளியே வெறுப்பது தாயுனக்கழகோ! உள்ளம் உவந்து ஒருபிடி செல்வம் அள்ளித் தருவாய் வெள்ளிக்கிழமையில்
அம்மா உன்னை வேண்டியே நின்றோம் அருளொடு பொருளும் தருவாய் நீயே! எங்கள் இல்லம் வருவாய் அம்மா என்றும் இன்பம் தருவாய் அம்மா.

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை வேளையில் வீட்டில் விளக்கேற்றும் பொழுது, மகாலட்சுமியை நினைத்து செல்வம் வர வேண்டி, பணம் பெருக மனமார நம்பிக்கையோடு துதிக்க வேண்டும்.

இத்தனை முறைதான் பாட வேண்டும் என்கிற எந்த விதிமுறையும் இல்லை. உங்களுக்கு எவ்வளவு முறை பாட வேண்டும் என்று தோன்றினாலும் தாராளமாக பாடலாம். அவளின் பொற்பாதங்களை வணங்கி சுகபோக வாழ்வு வாழ்வதற்கு தாயிடமே கேட்கும் பிள்ளையின் வேண்டுதலாக அமைந்துள்ளது.

எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும், கிரக நிலைகள் சரியாக இல்லை என்றாலும், தீவினைகள் நம்மை சூழ்ந்து இருந்தாலும் அவை யாவற்றையும் நீக்கி, சேய்க்கு தாயாக இருந்து உங்களுக்கு வேண்டியதை நிச்சயமாக தந்தருள்வாள்.

நீங்கள் காலையில் விளக்கு ஏற்றினாலும் இந்தப் பாடலை பாடலாம். இது போல் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்து வர மகாலட்சுமியின் அருள் கட்டாயம் உங்களுக்குக் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை பூஜையில் மஹாலட்சுமி தேவிக்கு பிடித்த ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்கவும். அது போல் கல் உப்பை ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்கவும். மகாலட்சுமிக்கு பிடித்தவற்றை நிவேதனம் படைக்கவும். இதுபோல் செய்தால் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here