பினாங்கு இராஜாஜி தமிழ்ப்பள்ளிக்கு 2.3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது

செ.குணாளன்

பினாங்கு பிப். 05 –

பினாங்கு ஜாலான் கம்போங் பாரு, ஆயிர் ஈத்தாம் காளியம்மன் ஆலய வளாகத்தில் செயல்பட்டு வரும் பினாங்கு இராஜாஜி தமிழ்ப்பள்ளிக்கு பினாங்கு மாநில அரசாங்கம் 2.3 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.

ஒரு ஆலயத்தில் உட்புறத்தில் செயல்பட்டு வந்து பினாங்கு மாநிலத்தில் பழைய தமிழ்ப்பள்ளியான இராஜாஜி தமிழ்ப்பள்ளி, பெற்றோர்கள் விரும்பும் அளவிற்கு போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் இல்லாத நிலையில், பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமியின் பல ஆண்டுகளாக முயற்சியில் ஒரு வகையாக ஆயிர் ஈத்தாம் பகுதியில் 2.3 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். கூடிய விரைவில் அதற்கான அதிகாரவப்பூர்வமான அறிவிப்பையும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அறிவிப்பார் என்று தமிழ்ப்பள்ளி வட்டாரம் தெரிவித்துள்ளது.

பினாங்கு இராஜாஜி தமிழ்ப்பள்ளிக்கு நிலம் கிடைக்கவில்லை என்ற பேரில் பல்வேறு கருத்துக்களும், வசைபாடல்களும் நிலவி வந்த வேளையில், இறுதியாக ஆயிர் ஈத்தாம், மையப் பகுதியில் பள்ளிக்கான நிலத்தை பினாங்கு மாநில அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தமிழ்ப்பள்ளி ஆர்வலர்கள் கருத்துரைத்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here