டிங்கில் தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எம்.எஸ்.மணியம்

டிங்கில் பிப் 7,

டிங்கில் பட்டணத்திற்கு அருகில் அமைந்திருக்கும் தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளியில் இவ்வாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் சிவகுமார், துணைத் தலைவர் அழகேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு இப்பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 29 ஆக இருந்த வேளையில் இவ்வாண்டு பதினோரு மாணவர்கள் அதிகரித்து 40 ஆக உயர்ந்துள்ளதாகவும் இது வரவேற்கத்தக்க ஒன்று என அவர்கள் கூறினர்.

மேலும் கடந்த ஆண்டு இப்பள்ளியில் ஆறு வகுப்புகளில் மொத்தம் 226 மாணவர்கள் பயின்று வந்ததாகவும் இவ்வாண்டு அது 237 ஆக உயர்ந்துள்ள்து என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். சிப்பாங் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்சியை பதிவு செய்து வரும் தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வரும் இப்பள்ளி உள்ளூர் / அனைத்துலக அளவில் நடைபெற்று வரும் பல்வேறு புத்தாக்கப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

மேலும் கல்வியிலும் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்து வரும் தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளியில் பல்நோக்கு மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு மேலும் பல வசதிகளை கொண்டு கல்வி, விளையாட்டு, புத்தாக்கம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவதால் இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர்கள் கூறினர்.

அதோடு டிங்கில் பட்டணம் மிகப் பெரிய மேம்ப்பாட்டு திட்டங்களோடு துரித வளர்ச்சி அடைந்து வரும் அதே வேளையில் பள்ளிக்கு அருகில் நடுத்தர, சொகுசு வீடுகளை கொண்ட பெரிய குடியிருப்பு பகுதி அமைந்துள்ளதோடு போக்குவரத்தும் சீராக உள்ளதால் பெற்றோர்களும், மாணவர்களும் இப்பள்ளியை தேர்வு செய்கிறார்கள் என்றும் இனி அடுத்து வரும் ஆண்டுகளிலும் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக சிவகுமார், அழகேந்திரன் தெரிவித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here