மக்கள் ஓசை செய்தியின் எதிரொலி – பிரபலமானார் தாப்பா தமிழ்ப்பள்ளியின் மலாய் தாய்

ராமேஸ்வரி ராஜா

தாப்பா, பிப். 9:

40 நிமிடங்கள் பயணம் செய்து பிள்ளைகளைத் தாப்பா தமிழ்ப்பள்ளியில் பயில வைக்கிறார் மலாய்த் தாய் எனும் ஒரு பக்க செய்தியை மக்கள் ஓசை வெளியிட்டிருந்தது. அதன் எதிரொலியாய் நீர் அசிரா அஸ்மி எனும் அந்த மலாய் தாய் பிரபலமாகி வருகிறார்.

மக்கள் ஓசையின் இந்தச் செய்தி மாணவர் அதிகரிப்புக்கும் வித்திட்டுள்ள வேளையில் பலரது பாராட்டினையும் பள்ளி பெற்றுள்ளது என தாப்பா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் வனஜா அண்ணாமலை தெரிவித்தார்.

அதில் ஒன்றாக மக்கள் ஓசை  செய்தியின் வழி விவரமறிந்த பெர்னாமா தொலைகாட்சி சம்பந்தப்பட்ட மலாய் தாய், மலாய் மாணவர்கள், சாதனை மாணவர்களோடு தம்மையும் பேட்டி கண்டு செய்தி வெளியிட்டதாக அவர் பெருமையுடன் தெரிவித்தார்.

தாப்பா தமிழ்ப்பள்ளியின் நான்கு  மலாய் மாணவர்கள் பயின்றுவரும் வேளையில், அவர்கள் சரளமாக தமிழ் மொழியில் பேசுவதும், கல்வியில் சிறந்து விளங்குவதும் அவர்களது பெற்றோர்கள் மட்டுமல்லாது பிறரையும் வியக்கவைக்கிறது என வனஜா குறிப்பிட்டார்.

இதன்வழி மக்கள் ஓசைக்கு பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்த அவர், நமது பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளியை தேர்வு செய்வதை உறுதி செய்வதற்கு நாளிதழ் ஆற்றிவரும் சேவை பாராட்ட தக்கது எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here