மதுரையில் வரத்து குறைவால் ரூ.3 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வந்த மல்லிகைப்பூ தற்போது கிலோ ரூ.700 ஆக விலை குறைந்துள்ளது.
தமிழகத்தில் சில மாதங்களாக தொடர் மழை பெய்தது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் மதுரை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மல்லிகைப்பூ உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு வழக்கமாக மல்லிகைப்பூ 10 டன் வரத்து இருக்கும். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ½ டன்னாக குறைந்தது.
தற்போது பனிப்பொழிவு குறைந்து வெயில் நிலவுவதால் மல்லிகைப்பூ வரத்து 2 டன்னாக உயர்ந்துள்ளது. இதனால் கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்ற மல்லிகைப்பூ தற்போது ரூ.700 ஆக விலை குறைந்துள்ளது.
பூக்களின் மொத்த விலை நிலவரம் கிலோவில் வருமாறு:-
தொடர் மழை காரணமாக மலைப்பகுதிகளில் விளையக்கூடிய பச்சை பட்டாணி விளைச்சல் அதிகரித்தது. கொடைக்கானல், ஊட்டி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் விளையும் பச்சை பட்டாணியின் வரத்து அதிகமாக உள்ளது.
வழக்கமான நாட்களில் கிலோ ரூ.100-க்கும், முகூர்த்த நாட்களில் ரூ.200 வரையும் பச்சை பட்டாணி விற்கப்படுவது வழக்கம்.
தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கிலோ ரூ.20 ஆக விற்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் முழுவதும் பச்சை பட்டாணியின் விலை ரூ.50-க்கும் குறைவாகவே இருந்தது.