இல்லந்தோறும் மக்கள் ஓசை நாளிதழ்.

பி.ராமமூர்த்தி 

மெந்தகாப் .பிப் .9-

நாட்டில் தமிழ்மொழி , தமிழ் பள்ளிகளை நிலை நிலைநாட்டவும் பல தரப்பினர் தொடர்ந்து பல வழிகளில் அவர்களின் பங்கை நிலைநாட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த 21 ஆம் நூற்றாண்டில் பல நவீன ஊடகங்கள் மக்களின் உள்ளங்கையில் தவழ்ந்து கொண்டிருந்தாலும் அதனையும் ஒரு பெரும் சவாலாக ஏற்று தமிழ் நாளிதழ்கள் குறிப்பாக மக்கள் ஓசை மனம் தளராமல் தமிழைத் தாங்கிப் பிடிக்கும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளது.

இந்திய சமுதாயத்தின் இதயக் குரல் என்ற தாரக மந்திரத்தோடு பயணித்துக் கொண்டிருக்கும் மக்கள் ஓசை நாளிதழ் நாட்டில் தமிழ் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கையுடன் ஆண்டுதோறும் நம் இந்திய மாணவர்கள் தமிழ் பள்ளிகளில் அதிகமாக இணைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு! இதில் தமிழ் பள்ளியில் படித்து அதன் நடவடிக்கைகளை முன்னிறுத்தியும் தமிழ் பள்ளி மாணவர்கள் தேசிய நிலையிலும் உலக அரங்கிலும் செய்த சாதனைகளை முன்பக்கச் செய்தியாக முக்கியத்துவம் வழங்கி வருகின்றது.

சமீபகாலமாக அச்சக மதிப்பிலான நாளிதழ்களை வாங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கை சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. அதனை களையும் நோக்கில் இல்லந்தோறும் மக்கள் ஓசை நாளிதழ் என்ற ஒரு புதிய பயணத்தை முன்னெடுத்துள்ளது என்று தெரிவித்தார் மக்கள் ஓசை செயலாக்க அதிகாரி எஸ் . கோபாலகிருஷ்ணன் , அவ்வகையில் பகாங் மெந்தகாப்பில் இயங்கும் பகாங் இந்தியர் சமூக ஒற்றுமை இயக்கம் (பிக்கிப்) தலைவர் எம். தர்மசீலன் , துணைத் தலைவர் ஆர். ரவிச்சந்தர் ஆகிய இருவரும் 50 மக்கள் ஓசை நாளிதழ் வாங்கி ஆதரவு அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here