உரிமை கோரிய டெல்லி சகோதரிகளின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

அயோத்தியில் மசூதிக்காக ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரிய டெல்லி சகோதரிகளின் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி நிலத்தகராறு வழக்கில் கடந்த 2019 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் அந்த நிலத்தில் கோயில் கட்டிக்கொள்ள இந்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்வதற்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவிட்டது.

இதையடுத்து மசூதிக்காக அயோத்தியின் தனிப்பூரில் 5 ஏக்கர்நிலத்தை உ.பி. அரசு ஒதுக்கியது. அந்த நிலத்தில் மசூதிக்கான பணிகள் கடந்த ஜனவரி 26-ம் தேதி தொடங்கின. இந்நிலையில் மசூதிநிலத்துக்கு உரிமை கோரி டெல்லியை சேர்ந்த 2 சகோதரிகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி தேவேந்திரகுமார் உபாத்யாய, நீதிபதி மணிஷ் குமார் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தி மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரமேஷ் குமார் சிங் ஆஜரானார்.

அவர் தனது வாதத்தில், ‘மனுவில் கூறப்பட்டுள்ள நிலப் பதிவு எண்ணும் மசூதிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் பதிவு எண்ணும் வெவ்வேறானவை. மசூதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் தனிப்பூர் கிராமத்தில் உள்ளது. மனுதாரர் குறிப்பிடும் நிலம் ஷேர்பூர் ஜபர் கிராமத்தில் உள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார்.

இதனை மனுதாரர்கள் தரப்பில்வாதிட்ட வழக்கறிஞர் ஏற்றுக்கொண்டு, மனுவை வாபஸ் பெறுவதாக குறிப்பிட்டார். இதையடுத்து டெல்லி சகோதரிகளின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மசூதிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தங்கள் நிலம் என தவறாகக்கருதி இந்த சகோதரிகள் வழக்கு தொடர்ந்துள்ளதாக அயோத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னதாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.

1947- இல் நாடு பிரிவினையின்போது, பாக்கிஸ்தானின் பஞ்சாபில் இருந்து உ.பி. வந்த கியான் சந்திரா பஞ்சாபி என்பவருக்கு பைஸாபாத் மாவட்டத்தில் 28 ஏக்கர் நிலம் 5 வருடக் குத்தகைக்குக் கிடைத்தது. குத்தகைக் காலம் முடிந்த பிறகும் நிலத்தின் மீது அவரது குடும்பத்தினர் உரிமை கோரி வருகின்றனர். இந்த வழக்கு நீண்ட காலமாகவே நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பிரச்சினைக்குரிய 28 ஏக்கர் நிலத்திலிருந்து 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட் டுள்ளதாகக்கூறி கியான் சந்திரா வின் 2 மகள்களால் வழக்கு தொடரப்பட்டது.

மனுவில் கூறப்பட்டுள்ள நிலப்பதிவு எண்ணும் மசூதிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் பதிவு எண்ணும் வெவ்வேறானவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here