இவ்வாண்டு தொடங்கி 4 இன்னும் கொரோனா அடங்கியபாடில்லை. குறைவதுபோல் குறைந்து மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இதற்கு என்ன காரணம் என்று சொல்லிப் புரிந்துகொள்ள வேண்டிய கட்டயாமோ அவசியமோ இல்லை.
கொரோனா அல்லது கோவிட்- 19 பற்றி அனைத்தும் அறிந்தவர்களாக மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர். இதில் சிலர் மட்டுமே விதிவிலக்கு. அவர்களால்தான் தொற்று வழிப்பறிதிருடனைப்போல் தொடர்ந்து வருகிறது. இவற்ரையெல்லாம் உணர்ந்தவர்களாக மக்கள் கவனமாகத்தான் இருக்கிறார்கள்.
மக்கள் நடமாட்டத்திலிருந்தே இதை தெளிவாக உணரமுடிகிறது. கடைத் தெருவுக்குச் செல்ல வேண்டிய அவசியத்தில் முகக்கவசம் அணிவது என்பது கட்டாயம் என்பது அவசியம் என்றாகிவிட்டது. குழந்தைகள் கூட வீட்டிலிருந்து கிளம்பும் முன் முகக்கவசம் தேடுகின்றனர். அதன் அவசியத்தை உணர்ந்து கேட்கின்றனர்.
இப்படி நடப்பது பழையதாகிவிட்டது. நடைமுறை பழக்கத்திற்கும் வந்துவிட்டது. இதையும் தாண்டி கொரோனா எண்ணிக்கை கூடுகிறது என்பது எல்லை தாண்டுவதால் அல்ல. பாதுகாப்பு எல்லையைத் தாண்டுவதால்தான். அப்படிச்செய்கின்றவர்கள் பாதுகாப்பில் ஒழுக்கமில்லாதவர்கள். இதுதான் காரணமாக இருக்க முடியும் என்பது தெளிவாகிறது.
இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டுகொண்டால் பூனைக்கு மணி கட்டிவிடலாம். அடையாளம் காண்பதை விட்டு அபராதம் விதித்தால் தீராது. இதுவரை அபராதத்தால் அப்படி நடந்ததாக அறியப்படவே இல்லை.
இன்னும் ஒன்றைச் சொல்லிதான் ஆகவேண்டும்!. தொற்று அதிகமாவத்ற்கு இன்னும் சரியான , தீர்க்கமான காரணங்கள் கூறப்படவே இல்லை என்பதுதான் அது. ஆனாலும் தொழிற்சாலைகள், தடுப்பு முகாமகள், சிறைக்கூடங்களில் தொற்று பரவுதல்கள் கட்டுப்பட்டால் நல்லவர்கள் தப்புவார்கள்.
காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை. காரணமில்லாமல் தொற்று அதிகரிக்காது. அப்படியென்றால் அதன் காரணம் என்ன? இதற்கான காரணம் தெளிவாகிவிட்டால் தொற்றுப் பரவல் குறையும் வழி கிடைத்துவிடும்.
பெருநாள் காலங்களில் குடும்பத்தினர் மட்டுமே கூடுவர். நண்பர்கள் கூட்டம் என்பதெல்லாம் இப்போது குறைந்துவிட்டது. வருகையாளர்கள் கூட முன்னெச்சரிகையுடன்தான் விருந்தினர்களாக வருகின்றனர்.
சீனப்பெருநாள் இன்னும் நெருக்கத்தில் இருப்பதால், சீனர்களின் வீடுகளில் பெருநாள் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். வருகின்ற புதிவர்களை ஸ்கேனிங் செய்து வெப்பப் பதிவு செய்துகொள்ளாலாம். வசதியற்றவர்களுக்கு முகக்கவசமே போதுமானதாகும்.
இதில் சமூக இடைவெளியை எதிர்பார்க்க முடியாது என்பதால், சுய பாதுகாப்புதான முக்கியமானதாக இருக்கும்.
நமக்கு விருப்பமில்லாவிட்டாலும் தொற்றுக்கு நம்மீது பிரியம் அதிகம் என்பதால் நாம்தான் எட்டிநிற்க வேண்டும். துஷ்டனைக்கண்டால் தூர நில் என்ற அருமையான பொன்மொழிகள் நம்மிடம் இருந்தும் அதுபற்றியெல்லம் நாம் சிந்திப்பதே இல்லை.
சன்றொர்கள் எழுதி வைத்த, சொன்ன வார்த்தைகளை இப்போதாவது தூசு தட்டிப்பார்போமே!
இந்த வார்த்தைகளை சீனர்களின் எருமை புத்தாண்டில் கடைப்பிடித்தால் தொற்றுக்கு வழியே இல்லை.
கைகளைக் கழுவுங்கள், முகக்கவசம் அணியுங்கள். எட்டி நில்லுங்கள், கை குலுக்குவதை நிறுத்துங்கள், கை எடுத்து கும்பிடுங்கள், எப்போதும் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள், இப்படி இருந்தால் தொற்று நம்மைத் தொடராது.
சீனப்புத்தாண்டு சீனர்களுக்கானது மட்டும் அல்ல. இப்புத்தாண்டு அனைத்து மலேசியர்களுக்கானது. எருது புத்தாண்டு புதுமையானதாக, அர்த்தமுள்ளதாக அமையப்போகிறது . அதனால் இது அருமையான் புத்தாண்டேதான் . அதோ வருது எருது!