கடவுள் கிருஷ்ணர் பெயரில் மோசடி செய்த 3 பேர் கைது !

பகவான் கிருஷ்ணர் பெயரில், உத்தரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் அமைத்துள்ள கோவர்தன் மலையை வெட்டி விற்பனை செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவரான கிருஷ்ணன் வணங்கப்படுகிறார். இவர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக போற்றப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் கிருஷ்ணர் பற்றி கூறப்பட்டுள்ளது.கிருஷ்ணரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் பக்தியுடன் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வணங்கப்படுகிறார். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அட்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் அன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இப்படி புகழ் பெற்ற கிருஷ்ணர் பூமியில் புதைந்துவிட்டதாக ஐதீகம். அதாவது, உத்தரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் அமைத்துள்ளது கோவர்தன் மலையில் புதைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், கோவர்தன் மலையை இந்துக்கள் புனித இடமாக கருதி வழிபடுகின்றனர்.

இந்நிலையில், கோவர்தன் மலையிலிருந்து ஒரு தரப்பினர் ஏராளமான பாறை துண்டுகளை வெட்டி எடுத்துள்ளனர். அந்தப் பாறை துண்டுகளை இந்தியா மார்ட் இணையதளத்தில் விற்பனை செய்ய அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி, ஒரு பாறை துண்டின் விலை 5,175ருபாய் என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வந்தனர்.

இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், இந்தியா மார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் அகர்வால் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here