முன்னாள் தலைமை நீதிபதி அரிஃபின் அவசரகால சிறப்பு சுயாதீனக் குழுவின் தலைவராக நியமனம்

புத்ராஜெயா: அவசரகால சிறப்பு சுயாதீன குழுவுக்கு பல நியமனங்களை பிரதமர் அலுவலகம் அறிவித்திருக்கும் வேளையில் முன்னாள் தலைமை நீதிபதி துன் அரிஃபின் ஜகாரியா இக்குழுவிற்கு தலைவராக இருப்பார்.

இந்த குழுவின் ஒரு பகுதியாக அரசாங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ சம்சுடின் ஒஸ்மான், முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டான் ஸ்ரீ நோரியன் மாய் மற்றும் முன்னாள் ஆயுதப்படைத் தலைவர் டான் ஸ்ரீ சுல்கிஃப்ளி ஜைனல் அபிடின் ஆகியோர் உள்ளனர்.

மற்றவர்கள் முன்னாள் சுகாதார இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் டான் ஸ்ரீ டாக்டர் மொஹமட் தாஹா ஆரிஃப், அறுவை சிகிச்சை நிபுணர் டான் ஸ்ரீ டாக்டர் யஹ்யா அவாங் மற்றும் அசோசியேட்டட் சீன சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி ஆஃப் மலேசியா (ACCCIM) தலைவர் டான் ஸ்ரீ டெர் லியோங் யாப்.

சைபர்ஜயா பல்கலைக்கழக சார்பு அதிபர் டான் ஸ்ரீ டாக்டர் ஆர். பாலன், முன்னாள் துணை அரசு வக்கீல் டத்தோ சல்லேஹுதீன் சைடின், பெர்லிஸ் முப்தி டத்தோ டாக்டர் மொஹமட் அஸ்ரி ஜைனுல் ஆபிடின், பொது சுகாதார நிபுணர் டத்தோ டாக்டர் ஆண்ட்ரூ கியு மற்றும் முன்னாள் சபா மாநில செயலாளர் டான் ஸ்ரீ சுகார்தி வாகிமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குழுவில் உள்ள பல அரசியல்வாதிகளில், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஸ்ரீ நோ ஒமர், படாங் லூபர் நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோ ஶ்ரீ  ரோஹானி அப்துல் கரீம், பியூஃபோர்ட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அஜீசா முகமட்  டான் மற்றும் பாசீர் புத்தே நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நிக் முஹம்மது சவாவி சல்லேஹ் ஆகியோர் உள்ளனர்.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான டத்தோ ஶ்ரீ  சைபுதீன் நாசுஷன் இஸ்மாயில் (கூலிம் -பண்டார் பாரு), அந்தோனி லோக் (சிரம்பான்) மற்றும் டத்தோ ஶ்ரீ டாக்டர் துல்கெஃப்ளி அஹ்மட் (கோலா சிலாங்கூர்) ஆகியோரும் இந்த குழுவில் உள்ளனர்.

இந்த நியமனங்களுக்கு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புதல் அளித்ததாக பிரதமர் துறை அலுவலகம்  தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here