கொரோனாவுக்கு மருந்து இதுதானா. ஆய்வில் வெளியான தகவல்.!

புழக்கத்தில் உள்ள மற்றொரு மருந்து கொரோனாவை எதிர்க்கும் தன்மை வாய்ந்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. புழக்கத்திலுள்ள தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக செயல்படுமா என்பது குறித்து ஆய்வுகளும் நடந்து வருகின்றன.மேலும் கொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் மஞ்சள் காமாலை நோய்க்கான மருந்து கொரோனா தொற்றை தடுப்பதாக தெரியவந்தது.

தற்போது மற்றுமொரு புழக்கத்தில் இருக்கும் மருந்து கொரோனா தொற்றுக்கு எதிராக செயல்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அது ஆஸ்துமா பிரச்சினைக்காக பயன்படுத்தப்படும் Pulmicort என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் Budesonide எனும் ஸ்டீராய்டு அடிப்படையிலான மருந்து.

தொற்று ஏற்பட்டவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதன் மூலம் அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய தேவையை 90% குறைத்து விடுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

முயற்சிக்கும் முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here