பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் மேலும் 3,318 புதிய கோவிட் -19 சம்பவங்கள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இப்போது நாடு 258,306 கோவிட் -19 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. மேலும் 17 பேர் மரணமடைந்துள்ளனர். மலேசியாவின் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை 953 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நாட்டில் 3,505 பேர் கோவிட் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். நாட்டில் 51,579 பேர் தனிமைப்படுத்தல் அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 258 பேர் அவசர சிகிச்சை பெற்று வரும் வேளையில் 119 பேர் வெண்டிலேட்டர் ஆதரவில் உள்ளனர்.