இயங்கலை சதுரங்கப் போட்டியில் செயின்ட் மேரி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த விளையாட்டாளர்களாகத் தேர்வு

கவின்மலர்

பாரிட் புந்தார்,பிப்.12-

இயங்கலை( ஆன்லைனில் ) நடத்தப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான 10ஆவது ஒற்றுமை சதுரங்கப் போட்டியில் பேராக் கிரியான் மாவட்டம் வவாசான் பள்ளி வளாகத்தில் செயல்படும் செயின்ட் மேரி தமிழ்ப்பள்ளியின் மாணவர்களான தேவதர்ஷன் தபெ லோகநாதன், கீர்த்தனன் தபெ குணாளன் ஆகிய இருவரும் பேராக் மாநில சிறந்த விளையாட்டாளர் விருதை வென்றார்கள். கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இயங்கலை வழியாக இப்போட்டியில் செயின்ட் மேரி பள்ளியிலிருந்து 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுத்து உள்ளனர். இது மாஸ்டர் சதுரங்க பயணம் ( Chess Master Journey Sdn.Bhd.)என்னும் தனியார் நினுவனம் நடத்தும் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

            

இது தவிர கல்வி அமைச்சின் கீழ், மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையிலான போட்டிகளிலும் இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பங்கெடுத்து வருகின்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பள்ளியின் சதுரங்கக் கழகப் பொறுப்பாசிரியர் திருமதி சு.சத்தியா மற்றும் அவர்தம் குழுவினருக்கும் பாடாற்றி ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கிவரும் பெற்றோர் பெருமக்களுக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் இரா.சுப்பிரமணியம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here