குட்டி இளவரசர் ரெடி.. மேகன் கர்ப்பம்..

  ‘ரெண்டுக்குமேல் இப்போது வேண்டாம் – ஹாரி 

இங்கிலாந்து:

ஹாரி – மேகன் தம்பதி தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகி வருகிறது.

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து, அரச முறைப்படி 2018- ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

எனினும், இங்கிலாந்து அரசு, அதிகாரம் மீது பற்றில்லாமல் இருந்த ஹாரி -மேகன் தம்பதி, குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாகக் கடந்த ஆண்டு அறிவித்தது.

தற்போது தெற்கு கலிஃபோர்னியாவில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு ஆர்ச்சி எனும் 2 வயது மகன் உள்ளார். இந்நிலையில், மேகன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.

இதுகுறித்து ஹாரி -மேகன் தம்பதியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், “ஆர்ச்சி அண்ணனாக போகிறார் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். Sussex இன் இளவரசரும், இளவரசியும் தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க பேராவலோடு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவர் மடியில் மனைவி

இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஓர் அழகிய பூங்காவில், கர்ப்பமாக இருக்கும் மேகன், தன் கணவர் மடியில் படுத்திருக்க, அவரது தலையை கணவர் ஹாரி அன்போடு ஏந்துவது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து பக்கிங்காம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “Duke இளவரசர், வேல்ஸ் இளவரசர் என்று ஒட்டுமொத்த அரச குடும்பமும் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். தவிர, ஹாரி – மேகன் தம்பதிக்கு தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் இரண்டு தான் ஹாரி – மேகன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து ஆய்வாளர் Jane Goodall கிண்டலாக, ‘குழந்தைகள் போதும், அதிகம் வேண்டாம்’ என்று சொல்ல, அதற்கு இளவரசர் ஹாரி, “அதிகபட்சம் இரண்டு.. அவ்வளவுதான்” என்று பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here