உயிரணுக்களை விற்ற தந்தை -மகனுக்கு நேர்ந்த சிக்கல்

    ரத்த தொடர்புகளைத் தேடி  களமிறங்கும் இளைஞன்.

அமெரிக்காவில் தந்தை செய்த காரியத்தால் மகன் டேட்டிங் ஆப்பை பயன்படுத்த முடியாத சிக்கலில் இருந்து வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய சேவ்ஃபோர்ஸ் என்பவர். இவருக்கு தனது சக தோழர்களை போல டேட்டிங் ஆப்பை பயன்படுத்த வேண்டுமென்று ஆசை.

ஆனால், அதில் இவருக்கு ஒரு சிக்கல் உள்ளது. ஏனென்றால் அவரின் தந்தை செய்திருக்கும் ஒரு காரியத்தை இணையத்தில் கண்ட சேவ்ஃபோர்ஸ் அதிர்ச்சி அடைந்தார்.அது என்னவென்றால் சேவ்ஃபோர்ஸ் தந்தை கடந்த 10 ஆண்டுகளாக 500 முறை உயிரணுக்களை விற்றுள்ளார். அதனால் சேவ்ஃபோர்ஸை தவிர அவரது தந்தைக்கு 50 குழந்தைகள் இருக்கிறார்கள் என்று இணையதள பக்கம் மூலம் தெரியவந்தது.

இதனால் அவர் டேட்டிங் ஆப்புகளை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனென்றால் டேட்டிங் ஆப் மூலம் தனக்கு அறிமுகமாகும் நபர்கள் தன் சகோதரியாக இருக்கக்கூடுமோ என்று எண்ணி வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சேவ்ஃபோர்ஸ் தனது சகோதர,சகோதரிகளை கண்டறியும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக அவர் 8 உடன் பிறந்தவர்களைக் கண்டறிந்துள்ளார்.

அவர் தனது பள்ளிப் பருவத்தில் நண்பராக இருந்தவரையும் தன் சகோதரர் என்று கண்டறிந்துள்ளார். மேலும் தன் அனைத்து சகோதர,சகோதரிகளையும் கண்டறியும் தீவிர வேட்டையில் களம் இறங்கியுள்ளார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here