போலி கொரோனா தடுப்பூசிகள் விற்பனை!

பல மில்லியன் லாபம் – சீனாவைச் சேர்ந்தவர் கைது!

சேலைன் , சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கலந்து போலி கொரோனா தடுப்பூசிகளாக விற்பனை செய்து பல மில்லியன் டாலர் மோசடியில் ஈடுப்பட்ட நபரை சீனா கைது செய்துள்ளது.
மோசடியில் ஈடுப்பட்ட காங் என அடையாளம் காணப்பட்ட  நபர், 58,000 க்கும் மேற்பட்ட தனது போலி தயாரிப்புகளை உருவாக்கும் முன், உண்மையான தடுப்பூசிகளின் பொதிகளின் வடிவமைப்புகளை ஆராய்ச்சி செய்துள்ளார்.
தடுப்பூசிகளின் ஒரு தொகுதி வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவை எங்கு அனுப்பப்பட்டன என்பது தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 70 பேரில் காங் என்பவரும் ஒருவரவார்.கொரோனா தடுப்பூசி மோசடியைத் தடுப்பதாக பெய்ஜிங் உறுதியளித்துள்ள நிலையில், 20 க்கும் மேற்பட்ட சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைதுகள் இடம் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பெரும்பாலான வழக்குகள் வெளிவந்த போதிலும், இந்த வாரம் புதிய விவரங்கள் வெளியிடப்பட்டன.நீதிமன்ற தீர்ப்பின்படி, காங் அவரது குழுவினர் 18 மில்லியன் யுவான் இலாபத்தை ஈட்டியதன் மூலம் சேலைன், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஊசியேற்றும் சிறிஞ்ச் கருவிகளால் செலுத்தி கொரோனா தடுப்பூசிகளாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் பதுக்கி வைத்துள்ளனர்.
இவற்றில் 600 தடுப்பூசிகள் கடந்த நவம்பரில் ஹாங்காங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன. உண்மையான உற்பத்தியாளர்களின் உள் தொடர்பாளார்கள் வழியாக தடுப்பூசிகள் பெறப்பட்ட அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஏனைய சந்தர்ப்பங்களில், போலி தடுப்பூசிகள் வைத்தியசாலைகளில் உயர் விலையில் விற்கப்பட்டுள்ளன. ஏனைய குற்றவாளிகளும் தங்களது சொந்த தடுப்பூசி திட்டங்களை மேற்கொண்டனர்.
கிராம மருத்துவர்கள் தங்கள் வீடுகளிலும் கார்களிலும் போலி தடுப்பூசிகளை மக்களுக்கு போட்டுள்ளனர். இதேபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க பொலிஸார் ஒத்துழைக்குமாறு சீனாவின் உயர் அதிகாரம் பெற்ற சட்டமன்றமான தேசிய மக்கள் பேராயம் பிராந்திய அமைப்புகளை வலியுறுத்தியுள்ளது.
கடந்த வாரம் சீனாவின் புத்தாண்டுக்கு முன்னர் 100 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதாக அதிகாரிகள் நம்பினர், ஆனால் இதுவரை 40 மில்லியன் மக்களுக்கு மாத்திரமே தடுப்பூசி போட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், கடுமையான ஊரடங்கு, சோதனை ,  தொடர்புகளை அறியும் நடவடிக்கைகள் மூலம் தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here