பைசர் நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசி தொழில்நுட்பம்

 திருட முயன்ற தென் கொரியா!

கிழக்கு ஆசியா நாடான வட கொரியா, அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான Pfizer-யிடமிருந்து கொரோனா தடுப்பூசி தொழில்நுட்பத்தை திருட முயன்றதாக தென் கொரிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று வரை வட கொரியாவில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை, பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு தரப்பிலிருந்து இதுவரை அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.

அதேசமயம், Oxford / AstraZeneca தடுப்பூசியின் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் டோஸ்களை பெற வட கொரியா எதிர்பார்த்து இருக்கிறது.

அதுமட்டுமின்றி COVAX தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் படி, ஆசிய நாடுகள் இந்த ஆண்டின் முதல் பாதியில் தடுப்பூசியின் 1,992,000 டோஸ்களை வட கொரியாவுக்கு ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் சிகிச்சையின் தொழில்நுட்ப தகவல்களைப் திருடுவதற்காக அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான Pfizer-ன் சர்வர்களை ஹேக் செய்ய வட கொரியா முயன்றது என தேசிய புலனாய்வு நிறுவனத்தை மேற்கோள் காட்டி தென் கொரியாவின் Yonhap ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற புலனாய்வுக் குழுவின் மூடிய கதவு அமர்வின் போது தேசிய புலனாய்வு நிறுவனம் (NIS) இந்த தகவல்களை வெளியிட்டது என்று Yonhap தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here