சிம்பாங் பெர்த்தாங் தோட்ட தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம்

க.கலை

ஜெலுபு, பிப். 12-

   ஜெலுபு சிம்பாங் பெர்த்தாங் தோட்ட தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் அடுத்த மாதம் கட்டி முடிக்கப்பட்டு மாணவர்கள் புதிய பள்ளியில் கல்வி பயில்வார்கள் என்ற நம்பிக்கை  உள்ளதாக ம.இ.கா ஜெலுபு தொகுதி தலைவர் ஆசிரியர் சுப்பரமணியம் கூறினார்.

   பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மூன்று மாடிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் சாலை அமைக்கும் பணியும் தற்சமயம்  நடைப்பெற்று வருவதால் இந்த பள்ளியின் அனைத்தும் அடுத்த மாதம் ஒரு நிறைவு பெறும் என்று ஆசிரியர் சுப்பரமணியம் கூறினார்.

   சிம்பாங் பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி கடந்த 2015 கட்டப்பட்டது. ஆனால் தேசிய முன்னணி ஆட்சியில் சுமார் 75 சதவீதம் கட்டப்பட்டு வந்தது.  நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஆட்சி அமைத்த பிறகு சிம்பாங் பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப்பணி சுணக்கம் காணப்பட்டது  என்று ஆசிரியர் சுப்பரமணியம் கூறினார்.

   இதைத் தொடர்ந்து ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த தோட்டத் தமிழ்ப்பள்ளி குறித்து மூன்று தடவை கேள்வி எழுப்பி சிம்பாங் பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்டுமாணப்பணியை விரைவாக கட்டுமாறு கேட்டுக்கொண்டார்.

   பக்கத்தான் ஆட்சியில் இந்த தோட்ட தமிழ்ப்பள்ளியின் கட்டிடம்   விரைவாக கட்டப்படவில்லை அதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் 

ஏற்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பிரதமராக டான்ஸ்ரீ முகைதீன் அவர்களின் தலைமையில் மலர்ந்த பிரிக்கத்தான் நேஷனல் ஆட்சியில் 

இப்போழுது அந்த தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணிகள் விரைவாக நடைப்பெற்று வருவதாக ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜலாலுடின் அலியாஸ் கூறினார்.

   அண்மையில் நான் கல்வியமைச்சரை சந்தித்து இந்த தோட்டத் 

தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணிகள் விரைவாக கட்டித்தறுமாறு கேட்டுக்கொண்டு புதிய கட்டிடத்தில் அடுத்த ஆண்டு பள்ளியில் மாணவர்கள் கல்வி தொடர்வதற்கு ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் டத்தோ ஜாலாலுடின்  தெரிவித்தார்.

  ஜெலுபு நாடாளுமன்றத்தில்  நான் அனைத்து இனத்தவர்களுக்கும். ஒரே மாதிரியாக உதவிகளை வழங்கி வருகிறேன் எந்த இனத்தையும் நாம் பிரித்து பார்க்காமல் அனைவரும் என் வாக்காளர்கள் என்ற அடிப்படையில் உதவிகளை வழங்கி வருகிறேன் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here