18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்

       -53 நாடுகளின் 91 படங்கள் திரையிடப்படுகின்றன

சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதில் 53 நாடுகளில் இருந்து 91 படங்கள் திரையிடப்பட உள்ளன.

18-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நேற்று தொடங்கியது. இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் தாணு, திரைப்பட விழாக் குழுவைச் சேர்ந்த தங்கராஜ், காட்டகர பிரசாத், ரவி கோட்டாரகரா, நடிகைகள் சுகாசினி, சுகன்யா, இயக்குநரும் நடிகருமான மனோபாலா உள்ளிட்டஏராளமானோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த கலாச்சார தூதர்கள் கலந்துகொண்டனரஇந்த விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்நடத்தும் இந்த திரைப்பட விழாவை பிவிஆர் இணைந்து வழங்குகிறது.

சென்னையிலுள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் (சத்யம் சினிமாஸ் – சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ், செரின் அரங்குகள்), காசினோ திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படுகின்றன. தொடக்கவிழா திரைப்படமாக பிரான்ஸ் நாட்டின் ‘தி கேர்ள் வித் எ பிரேஸ்லெட்’ என்ற படம் நேற்று மாலை திரையிடப்பட்டது.

இந்தியன் பனோரமா பிரிவில் ‘பாஸ்வேர்டு’, ‘அக்கா குருவி’ உள்ளிட்ட 4 தமிழ்ப்படங்கள் இடம்பெறுகின்றன. மேலும், தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் ‘லேபர்’, ‘கல்தா’, ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘மழையில் நனைகிறேன்’, ‘மை நேம் இஸ் ஆனந்தன்’, ‘காட்ஃபாதர்’, ‘தி மஸ்கிட்டோ பிலாசபி’, ‘சீயான்கள்’, ‘சம் டே’, ‘காளிதாஸ்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘கன்னி மாடம்’ ஆகிய 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் தமிழ்ப்பிரிவில் 17 படங்கள் இடம்பெறுகின்றன.

மேலும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘ஆப்பிள்ஸ்’, ‘குவூ வாடிஸ், ஆய்டா?’, ‘லிஸன்’, ‘தி ஸ்லீப் வாக்கர்ஸ்’, ஆக்னெஸ் ஜாய்’, ‘ரன்னிங் அகைன்ஸ்ட் தி விண்ட்’, ‘ரன்னிங் டு தி ஸ்கை’ ஆகிய படங்கள் பங்கேற்கின்றன. அதேபோல், கேன்ஸ் திரைப்பட விழா, பெர்லின், ஈரான், வெனீஸ், ரோட்டர்டாம், பூசான் சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்ற படங்களும் இடம்பெறுகின்றன.

இந்தோ சினி அப்ரிஷியேஷன்ஃபவுண்டேஷன் பொதுச்செயலாளர் தங்கராஜ் தொடக்க விழாவில் பேசினார்.

இந்த ஆண்டு 91 படங்கள் திரையிடப்படுகின்றன. எப்போதும் போல இந்த ஆண்டும் தமிழக அரசின்ஒத்துழைப்புடன் விழாவை நடத்துகிறோம். விழாவுக்கு தமிழக அரசுரூ.75 லட்சம் நிதி அளித்துள்ளது. கடந்த முறையே ரூ.1.கோடி நிதியுதவி கேட்டு கோரிக்கை வைத்தோம். கூடுதலாக நிதி கிடைத்தால், இந்த திரைப்பட விழாவை இன்னும் பிரம்மாண்டமாக நடத்த முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here