லோபாக் தமிழ்ப்பள்ளிக்கு 3 மாடி இணைக் கட்டடம் மண்டப நிதி திட்டத்தில் கட்டடத்தை கட்டுங்கள்-முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் வலியுறுத்து

நாகேந்திரன் வேலாயுதம்

சிரம்பான், பிப்.21-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பழமையான வரலாற்றை கொண்டுள்ள தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான லோபாக் தமிழ்ப்பள்ளி, இன்றைய காலக்கட்டத்தில் அதிக மாணவர்களை கொண்ட சிறந்த பள்ளிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது என்கிறார் நெகிரி செம்பிலான் தமிழர் சங்கத் தலைவர் எட்வர்ட் கானசேகரன்.

பல சாதனையாளர்கள் கல்வி, பொருளாதரம், கலை கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் உருவாக்கிய பெருமையை கொண்டுள்ள அப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளாக புதிய மாணவர்களின் வருகை அப்பள்ளியில் அதிகரிக்கத் தொடங்கிவுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தற்போது வகுப்பறை பற்றக்குறை எதிர்நோக்கிவுள்ள அப்பள்ளிக்கு, புதிய மூன்று மாடி இணைக் கட்டடத்தை பள்ளி வளாகத்தில், சொந்த நிலத்தில் கட்டுவதற்கு பள்ளி நிர்வாகம், பள்ளி மேலாளர் வாரியக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் முன்வந்திருப்பது பாரட்டக்குறிய செயல் என எட்வர்ட் தெரிவித்தார்.

இதனிடையே தற்போது அப்பள்ளி இணைக் கட்டடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்ட இரண்டு ஏக்கருக்கும் குறைவான அந்நிலத்தில், பல்நோக்கு மண்டபம் ஒன்று கட்டுவதற்கு பள்ளி மேலாளர் வாரியக்குழு நிதி திட்டம் ஒன்றை கடந்த 2015 ஆம் ஆண்டில் தொடங்கியது என கூறுகிறார்கள் மாணவர்கள் பெற்றோர்களான பிரகாஷ் கண்ணன், சங்கர் வெங்கடசலம், ஜெயபாலன் பத்துமலை, பாலசுப்பிரமணியம் பிள்ளான் மற்றும் முன்னாள் மாணவர்களான ராஜேந்திரன் ராஜூ, சோலையப்பன் உருமன், சுந்தரராஜா ரத்தின சிங்காரம் ஆகியோர்.

சிரம்பான், லோபாக் வட்டார பொதுமக்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் கொடை நெஞ்சர்கள் என பலர் இத்திட்டத்திற்கு வாரி வாரி நிதியை வழங்கிவுள்ளார்கள். ஆக மொத்தம் சுமார் வெ.10 லட்சம் திரட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலைமையில் தற்போது அந்த பல்நோக்கு மண்டபம் கட்டுமான திட்டம் கைவிடப்பட்டு, அங்கு பள்ளி இணைக் கட்டடம் நிரமானிக்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். மாணவர்கள் தங்கள் கல்வியை வசதியான சூழலில் மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு இத்திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என கூறினார்கள்.

அதே வேளை மண்டப கட்டுமான திட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற நிதியை கொண்டு, பள்ளி கட்டடம் கட்டுமான திட்டத்தை விரைந்து தொடக்குமாறு பள்ளி நிர்வாகம் மற்றும் மேலாளர் வாரியக்குழு ஆகிய தரப்பை தாங்கள் வலியுறுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அந்நிதி திட்டத்திற்கு நன்கொடை வழங்கியவர்கள் என்ற உரிமையில், லோபாக் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டை முன்வைத்து நாங்கள் முன் வந்து வழங்கிய அந்நிதி, தொடர்ந்து பள்ளி மேம்பாட்டுக்கு, குறிப்பாக இன்று தேவையாகிவுள்ள வகுப்பறைக்கான கட்டடத்தை நிர்மானிக்கும் திட்டத்திற்கு பயன்படுத்துமாறு அவர்கள் தங்கள் கருத்தை அவ்வாறு வெளிப்படுத்தினார்கள்.

இவ்வட்டார மக்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் கருத்தை தாமும் வரவேற்பதாக கூறிய அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வி.எஸ்.குணசேகரன், மண்டப கட்டுமான திட்டத்திற்கு திரட்டப்பட்ட நிதியை, கட்டட கட்டுமான திட்டம் தொடங்குவதற்கு பயன்படுத்த வாரியக்குழு விரைந்து அனுமதி தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கடந்த வாரம் நடைப்பெற்ற பள்ளி தலைமையாசியர் திருமதி மேனகை மற்றும் தம்முடன் நடைப்பெற்ற சந்திப்பில், பள்ளி மண்டப கட்டுமான திட்டத்திற்கு சேகரிக்கப்பட்ட நிதியை, அத்திட்டத்திற்கு மட்டுமே தொடர்ந்து நிலை்நிறுத்தப்படும்் என வாரியக் குழு தலைவர் ஜெயகுமார் முனியாண்டியின், அக்கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள் என்பது நடப்பு நிலவரம் என ராஜேந்திரன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here