–அறிவித்தது, பாக்கிஸ்தான்
குறிப்பாக பாதுகாப்பு, பயங்கரவாதம், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், உளவுத்தகவல் பரிமாற்றம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு , உதவி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த பயணத்தையொட்டி, இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.360 கோடி) கடனுதவி வழங்கப்போவதாக இ்ம்ரான்கான் அறிவித்தார். மேலும் இலங்கையில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக ரூ.5.20 கோடி நிதியுதவியும் அறிவித்தார்.
இம்ரான்கான் பயணம் தொடர்பாக இருநாடுகளும் இணைந்து நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகி இருந்ததன.
மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாக்கிஸ்தான், சமீபத்திய கொரோனா ஊரடங்கால் மேலும் பெரும் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறது.