ஜோ பிடனின் முதல் இராணுவ நடவடிக்கை.

சிரியாவில் உள்ள ஈரான்

ஆதரவு படைகள் மீது தாக்கதல்

வாஷிங்டன்:

சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் ஈராக்கில் நடந்த ஒரு ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவ தலைமயகமான பென்டகன் கூறியுள்ளது.

அமெரிக்கா அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை இது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக சிரியாவில் அதிரடி தாக்குதல் அமெரிக்கா தொடங்கி உள்ளது.

ஈரானிய ஆதரவுடைய போராளி குழுக்களை அழிக்கும் பொருட்டு அமெரிக்கா நேற்று சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த மாத தொடக்கத்தில் ஈராக்கில் நடந்த ஒரு ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்டதாக பென்டகன் கூறியுள்ளது

ஈரான் ஆதரவு படைகள் கடந்த மாதம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஒரு காண்ட்ராக்டர் கொல்லப்பட்டார். அமெரிக்க மற்றும் அதன் பிற நட்பு நாடுகளின் ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து ஈரானிய ஆதரவுடைய படைகளை குழுக்களை அழிக்க அமெரிக்க அதிபர் பிடன் வான்வழித் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். அமெரிக்க அதிபராக பிடன் பதவியேற்ற பின் மேற்கொள்ளப்பட்ட முதல் இராணுவ நடவடிக்கை இதுவாகும.

அதிபர் பிடனின் வழிகாட்டுதலின் படி, அமெரிக்க இராணுவப் படைகள் நேற்று(வியாழக்கிழமை0 மாலை கிழக்கு சிரியாவில் ஈரானிய ஆதரவு போராளி குழுக்கள் பயன்படுத்தி வரும் முகாம்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. நட்பு நாடுகளுடன் ஆலோசித்த பின் நடத்தப்பட்டது என்று அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஜோ பிடன் அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் வீரர்களைப் பாதுகாக்க செயல்படுவார் என்பதையே பிடன் உத்தரவு காட்டுகிறது. அதே நேரத்தில், கிழக்கு சிரியா மற்றும் ஈராக்கில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு அமெரிக்கா செயல்படுவது தெரிகிறது.

ஈராக்கின் தன்னாட்சி பிரதேசமான குர்திசில் உள்ள இர்பில் நகரத்திற்கு அருகே பிப்ரவரி 15 ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடந்தது. கடந்த காலத்தில், ஈரானிய ஆதரவுடைய ஷியா போராளி குழுக்கள் ஈராக்கில் அமெரிக்கர்களை குறிவைத்து ஏராளமான வான்வெளி தாக்குதல்களை நடத்தி இருந்தனர். எனவே இதுபற்றி விசாரணை நடத்த வேண்டிய பொறுப்பு ஈராக்கிற்கு இருப்பதாக அமெரிக்கா கூறிவந்தது. இந்த நிலையில் தான் பிடன் தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here