– மலைக்க வைத்த மாசி திருவிழா தேரோட்டம்
10- ஆம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. வழக்கமாக மாசித்திருவிழா தேரோட்டத்தின்போது பெரிய தேரில் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி, தெய்வானையுடனும், பெரிய தேரைவிட சற்று சிறிய தேரில் தெய்வானை அம்பாளும், சிறிய தேரில் விநாயகரும் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வருவார்கள்.
இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 2 பெரிய தேர்களையும் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஆகியோர் 3 சிறிய தேர்களில் எழுந்தருளி, ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தின் போது பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர்.
11- ஆம் திருநாளான நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி- அம்பாள் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு செல்கிறார்கள்.