பெர்கேசோவின் வேலை வாய்ப்புச் சந்தை-வெபினார் வழி வேலை வாய்ப்பு காப்பீட்டு முறை

புதிய இயல்பு முறையில் வெற்றிநடைபோடும் தற்போதைய இயங்கலை வாயிலான தொழில் சந்தை வாய்ப்பினை மெய்நிகர் வாயிலாக மனித வள அமைச்சின் கீழ் செயல்படும்   பெர்கேசோ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.தொழிலாளர் சந்தை      வாய்ப்புகளைத் தூண்டுவதற்கும்

கோவிட்-19   நாட்டைத் தாக்கியதிலிருந்து வேலை இழப்பால் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உதவும் முயற்சியிலும் இந்த வெபினார் தொழில் சந்தை வாய்ப்பினை நேற்றுக் காலை 9.30 மணி முதல் மாலை 5.30மணி வரை வழிநடத்தினார் பொருளாதார மற்றும் எதிர்காலத் தொழிலாளர் சந்தை ஆய்வு மையத் தலைவர் முனைவர் டாக்டர் முகமட் யூசோப் சாரி. 10,000 வேலை வாய்ப்பினைத் தாங்கி பல்வேறு பெருநிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்ற இந்தத் தொழில்துறைச் சந்தையில் சுமார் 900 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கோவிட்-19 காலகட்டத்தில் சவால்களை எதிர்கொள்ள பங்கேற்பாளர்களைத் தயார்ப்படுத்தும் வகையில் LS TRAINING உரிமையாளர் அஸ்னாவி பின் யூசோப் வாய்ப்புகளும் சவால்களும் எனும் தலைப்பில் பொருளை விற்பனைப்படுத்துதல், வாடிக்கையாளர் சேவை, கற்றல் வளர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு போன்ற அம்சங்களை முன்னிருத்தி தற்போதைய இயங்கலை வணிகம் கால் பதித்துள்ளது என்பதைப் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தார். எனவே வேலைக்கு விண்ணப்பிக்கும் பங்கேற்பாளர்கள் தங்களை இயங்கலையில் தகுயுள்ளவர்களாக உயர்த்திக்கொள்வது அவசியம் என்றார்.

தற்போதைய தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு ஏதுவாக வேலை தேடுபவர்கள் LINK IN,ZOOM,GOOGLEMEET, புலனம்,ஃபேஸ்புக் இன்ஸ்தாகிராம் போன்ற செயலியைக் கையாளும் திறனை மேம்படுத்திக் கொள்வதன் வாயிலாக வேலையில்லாதவர்கள், இளம் பட்டதாரிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் வேலை வாய்ப்பினைப் பெற உதவியாக இருக்கும் என்பதற்கு நற்சான்றாக அமைகிறது கடந்த வாரம் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்த –MY DIGITAL திட்ட அறிமுகவிழா.

இதைத் தொடர்ந்து மலேசிய சுகாதார அமைச்சைச் சேர்ந்த மனநல நிபுணர், டாக்டர் சித்தி ஹஸ்ரா செலாமாட் டின் கோவிட்-19இன் பாதிப்பும் மனநல ரீதியான தாக்கமும் என்ற தலைப்பில் கோவிட்-19 காலகட்டத்தில் மக்களிடயே ஏற்பட்ட சமூக இடைவெளி, அலுவலகம் மற்றும் வேலை இட முடக்கம் மக்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தி வீட்டிலிருந்தபடி வேலையைச் செய்யும்போது வேலையின் தரம் குன்றியது.

பலர் வேலையை இழந்து பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு பெரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகினர்.  மலேசிய அரசாங்கமும், BAITULMAL, AKPK அரசு சாரா அமைப்புகள், சமூக நலத்துறை,மற்றும் பல அமைப்புகளும் பொதுமக்களும் பலவகையில் நிதி உதவிகளையும் பொருள் உதவிகளையும் செய்ய முன்வந்தனர்.

மலேசிய சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் –MENTARI(The Community Mental Health Centre) மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றது.Talian NUR15999,Talian kasih Talian Psikososial COVID&19,தொடர்பு கொண்டு அருகிலுள்ள கிளினிக்கிற்குச் சென்று மனநல நிபுணரை கலந்தாலோசிக்க வேண்டும்.

MENTARI வழி வேலை வாய்ப்பிற்கான பயிற்சி பெற்று மற்றும் வேலை வாய்ப்பிற்கு IPS நடவடிக்கை  வாயிலாக  பலர் பயனடந்து 60% வேலையில்லாதவர்கள் வேலை செய்யத் தொடங்கிவிட்டனர்.

தொடர்ந்து Exxonmobil எண்ணெய் மற்றும் எரிவாயு துறை)  அதிகாரிகள் குழு  வேலைவாய்ப்புக்கான சாத்தியமும் வழிகாட்டியும் என்ற தலைப்பில் அஷாதுல் அமெரி இஸ்மாயில்,  லீ கிம் சுவான், மனித வளத்துறை அதிகாரிகள், இளம் பட்டதாரிகள் மற்றும் வேலை வாய்ப்பு தேடும் மலேசியர்களுக்கு இது ஒரு தளமாக இருக்கும் என்பதனை வலியுறுத்தினர்.

உலகம் முழுவதும் 75,000 பணியாளர்களைக் கொண்ட பெருநிறுவனமாக Exxonmobile எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிக்கும் பிரிவு,  ரசாயனப் பிரிவு, உலகளாவிய பணி தொடர்பான சேவைப் பிரிவு மற்றும் தனியார் துறை போன்ற பிரிவுகளில் வேலைக்கு உயர் பதவியிலிருந்து கீழ் நிலை பணியாளர் வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது.

125 ஆண்டு காலம் மலேசியாவில் நிலைத்து வரும் இந்நிறுவனம் மருத்துவர்கள், தாதியர்கள், தொழிற்நுட்ப நிபுணர்கள், பொறியியலாளர்கள், பயிற்றுநர்கள், மாணவர்கள் (இன்டென்ஷிப்) Profesional Apperincesship Learning Programme (PINNACLE) INTERNSHIP FOR PROFESSIONALS  மாணவர்களும் JobsExxonmobil.com அகப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

Exxonmobil- மேலதிகாரிகளான  ஷரினா இஸ்மாயில் மற்றும்  அஹமட் இப்ராஹிம் ஜூரிட் விண்ணப்ப பாரங்களை பூர்த்தி செய்யும் வகை, முறைகளை வெபினார் மென்திரையில் பங்கேற்பாளர்களுக்கு விளக்கினார்.  பங்கேற்பாளர்கள் தரமான சுயவிவரம் தயாரிப்பதன் வழி விண்ணப்பதாரரின் தனிச்சிறப்பை வெளிக்கொணரும் என தெளிவுபடுத்தினர்.

அதேவேளை நம்மை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லவும் நம்மை நிபுணத்துவப்படுத்தவும் மெய்நிகர் உலகைக் கையாள்வது இன்றியமையாத ஒன்றாகும் என்றார்.

 முகமட் ஷாஃபிக் பின் சாலே, SG AKADEMIK மேலாளர்

எதிர்காலத்தில் ‘டுரோன்’- பயன்பாடு மற்றும் டுரோன் ஆப்பரேட்டர் , டுரோன் நிபுணர்,  engineers போன்ற துறைகளில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

PERKESO வின் ‘வேலைக்குத் திரும்பலாம்’ எனும் திட்டத்தின் வழி வெற்றியை நோக்கிப் பயணிக்க மலேசியர் அனைவரையும் இத்திட்டதில்  விண்ணப்பிக்க ஆவலுடன் அழைக்கின்றனர். இத்தொழில் சந்தையில்  ரோபர்ட் அரேன்ஸ், WCC Smart Search and Match தகவல் கட்டட வடிவமைப்பாளர் தொழில் மேம்பாட்டு சேவை மற்றும் விழிப்புணர்வு விளம்பரம்  எனும் தலைப்பில் பொது வேலை வாய்ப்பு சேவை குறித்து விளக்கம் அளித்தார்.

WCC Smart Search and Match  தொழில் சந்தை ஆலோசகர் மார்ஷல் பேக்கர், தொழிலாளர் சந்தையின்  தகவல் பயன்பாட்டின் வழி வேலைக்கான சுயமதிப்பீடு செய்யும் முறைமை குறித்து விளக்கினார்.

பிராஞ்சாய்ஸ் டூமோரா, ILO நிறுவனத்தின் தொழிற்நுட்ப நிபுணர் மேலும் வேலைச் சூழலில் தொழிலாளர் சந்தை தகவல்களின் பயன்பாடு விளக்கினார்.

இறுதியாக முகமட் ஹரிஃவ் பின் அஸிஸ்,PRS கிளைத் தலைவர் EIAS பிரிவு தொழிலாளர் சந்தை தகவல் பயன்பாடு மற்றும் வேலைவாய்ப்பு காப்பீட்டு முறை (Employment Insurance System ) வழிகாட்டிகளை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here