தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுமா?

வெளிநாட்டு பயணங்களுக்காக மட்டுமே தடுப்பூசி பாஸ்போர்ட் பயன்படுத்த வேண்டுமே தவிர மக்கள் உள்நாட்டு சேவைகளை பயன்படுத்த தடை விதிக்கக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தடுப்பூசி பாஸ்போர்ட் குறித்து கருத்துரைத்த தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தடுப்பூசி பாஸ்போர்ட் செயல்படுத்தும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இதில் உலக சுகாதார அமைப்பின் கருத்துகளை நாங்கள் பெற்று வருகிறோம். ஏனெனில் தற்பொழுது எந்த நாடுகள் தடுப்பூசி பாஸ்போர்ட்டை ஏற்றுக் கொள்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. மேலும் எந்த தடுப்பூசியை மற்ற நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது எங்களுக்கு தெரியாது என்றார்.

செக் குடியரசு, ஹங்கேரி, சுவீடன் ஆகிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள், பயணங்களிடையே பச்சை பாஸ்போர்ட் முறையை செயல்படுத்துகின்றன.

மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் முனியாண்டி தடுப்பூசிக்கான பாஸ்போர்ட் யோசனையை ஆதரித்தார். இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் சிலர் தடுப்பூசி போட்டு கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

அரசாங்கம் தடுப்பூசியை போட்டு கொள்ள கட்டாயப்படுத்தவில்லை என்றாலும் அதன் நன்மைகள் குறித்து அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என்றார். மேலும் உங்களுக்கு தடுப்பூசி போடபட்டது எவ்வாறு நிரூப்பிது? அதற்கு ஆவணம் தேவை என்று கருத்துரைத்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here