குடியரசு கட்சிதான் குடியிருப்பு! –

 தோல்விக்கு பிறகு பேசிய ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த அதிபர் ட்ரம்ப் முதன்முறையாக மேடை ஒன்றில் பேசியுள்ளார்.

கடந்த நவம்பரில் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனிடம் தோல்வியடைந்தார் முன்னாள் அதிபர் ட்ரம்ப். இந்நிலையில் குடியரசு கட்சியில் உள்ளவர்களே ட்ரம்ப் மீது மனக்கசப்பில் இருப்பதாகவும், இதனால் ட்ரம்ப் புதிய கட்சி தொடங்கபோவதாகவும் பேச்சு எழுந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஓர்லண்டோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில் முதன்முறையாக கலந்து கொண்டு பேசினார் அதிபர் ட்ரம்ப். அப்போது பேசிய அவர் தான் புதிய கட்சி தொடங்க போவதாக வெளியாகும் அறிவிப்பில் உண்மை இல்லையென்றும், தான் குடியரசு கட்சியில் இருந்து கட்சியை வலுப்படுத்தபோவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் ஜோ பிடன் அரசு நிர்வாகத்தை மேற்கொள்வதில் தோல்வி அடைந்து விட்டதாகவும், அடுத்த தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here