ஆயர் சிலாங்கூரின் புதிய நீர் சுத்திகரிப்பு திட்டம் மையம் அறிமுகம் – ராசாவ் நீர் விநியோகத் திட்டம்

ஆயர் சிலாங்கூர் மலேசியாவிலேயே மிகப்பெரிய நதியோர நீர் தேக்க திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ராசாவ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முதல் கட்டப் பணி 2024ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும்

இயற்கை நீர் மூலங்களான ஆறுகளையும் நதிகளையும் நாம் பெரிதும் பொருட்படுத்துவது கிடையாது; அவற்றின் முக்கியத்துவத்தை உணராது அலட்சியம் செய்கிறோம். எடுத்துக்காட்டாக, 13 கிளை ஆறுகளைக் கொண்ட மலேசியாவின் நான்காம் பெரிய நதியாகத் திகழும் கிள்ளான் நதி பல ஆண்டுகளாக கிட்டதட்ட 120 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாசுபட்டு கிடக்கின்றது. ஆனால் வெகு விரைவில் இந்நிலை  மாறி கிள்ளான் நதி  பொலிவு பெறும். ஏனெனில் மத்திய மற்றும் மாநில அரசாங்கம் ஒன்றிணைந்து கிள்ளான் நதியை மீட்டெடுத்து, அதனை பொருளாதார, பொழுதுபோக்கு, சுற்றுலாத்தள மற்றும் அடிப்படை தேவைகளுக்காகப் பயன்படுத்த உள்ளனர். கிள்ளான் நதியைப் பற்றிய தவறான கண்ணோட்டம் மாறும். ஏனெனில் வரும் சில வருடங்களில், இந்நதியானது கிள்ளான் மற்றும் பெட்டாலிங் பகுதிகளுக்கு நீர் விநியோக செய்ய இருக்கும் புதிய நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு மூலநீர் வழங்கும் நதியாக உருவெடுக்க இருக்கின்றது.

சிலாங்கூருக்கு மூலநீர் வழங்கும் நதியாக கிள்ளான் நதி

ராசாவ் நீர் விநியோகத் திட்டத்தின் அவசியம்

சமீபத்திய நிலவரத்தின்படி, நம் நதிகளிலிருந்து பெறும் நீரின் தரம் குறித்து ஐயப்பாடு நிலவி வருகின்றது. குறிப்பாக கடந்தாண்டில் பல மாசுபட்ட நதிகளை மீட்டெடுக்கும் பணிகளில் ஆயர் சிலாங்கூர் ஈடுபட்டது. இதனால் பயனீட்டாளர்களுக்கு நீர் விநியோகிப்பதில் தடை ஏற்பட்டது.  ஒரே மூலமான சிலாங்கூர் நதி திட்டத்தினை மட்டுமே சார்ந்து இருப்பதால், கூடுதல் நீர் வழங்கல் இல்லாமல் அதிக ஆபத்தினை விளைவிக்கின்றது, அதே சமயம் லாங்காட் 2 நீர் சுத்திகரிப்பு மையத்தினால் கிள்ளான் பகுதிகளுக்கு நீர் விநியோகிக்க முடியாது. ஏனெனில், நீர் விநியோகிக்க நீண்ட தூர குழாய்கள் தேவைபடுவது மட்டுமின்றி அதிக கட்டுமான செலவுகளையும் ஏற்படுத்தும். இம்முறை அதனை சரிசெய்யும் நோக்கிலும் சுத்திகரிக்கப்பட்ட நீரை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது ஆயர் சிலாங்கூர் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகத் திகழ்வதாலும் புதிய நீர் நிலைகளைத் தேடும் அவசியமும் கடப்பாடும் தற்போது ஆயர் சிலாங்கூருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 2021ஆம் ஆண்டின் நிலவரப்படி சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் ஒட்டுமொத்த நீர் கையிருப்பு அளவு 12.8 விழுக்காடாக உள்ளது.  8.4 மில்லியன் பயனீட்டாளர்களுக்கும் தேவையான சுத்தமான மற்றும் தொடர்ச்சியான நீர் விநியோகத்தினை அளிக்க புதிய நீர் நிலைகளைத் தேடுவதில் ஆயர் சிலாங்கூர் முனைந்து வருகிறது. புதிய மூல நீராக, கிள்ளான் நதியானது நீர் கையிருப்பை 15 விழுக்காடு வரை உயர்த்தி அது தரமான நீரை எதிர்காலத்தை உறுதிசெய்யும். இதனை ராசாவ் நீர் விநியோகத் திட்டத்தின் கட்டுமானத்தின் வழி அடைய முடியும்.

சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை லங்காட்டிற்கு அடுத்து 1,288 சதுர கிலோமீட்டர் தொலைவுடன் சிலாங்கூரின் மூன்றாம் பெரிய நதியாக கிள்ளான் நதி திகழ்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இருப்பினும் இந்நதியிலிருந்து தற்போது 7 விழுக்காடு நீர் மட்டுமே குடிநீர் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆயர் சிலாங்கூரின் ராசாவ் திட்டம் இந்நதியின் நீரை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு நோக்கம் கொண்டுள்ளது.

மலேசியாவிலேயே மிகப்பெரிய நதியோர நீர்தேக்க திட்டம் (ஓ.ஆர்.எஸ்)

மலேசியாவின் மிகப்பெரிய நதியோர நீர் தேக்க திட்டமாக ராசாவ் நீர் சேகரிப்புத் திட்டம் கருதப்படுகின்றது. இத்திட்டத்தின் கட்டுமானம் வடக்கு-தெற்கு எக்ஸ்பிரெஸ்வேய்ஸ் நெடுஞ்சாலை மத்திய இணைப்பு (ELITE), ஷா ஆலம் எக்ஸ்பிரெஸ்வேய்ஸ் நெடுஞ்சாலை (KESAS), மேற்கு கடற்கரை எக்ஸ்பிரெஸ்வேய்ஸ் நெடுஞ்சாலை (WCE) மற்றும் தெற்கு கிளாங் பள்ளத்தாக்கு எக்ஸ்பிரெஸ்வேய்ஸ் நெடுஞ்சாலை (SKVE) ஆகிய பல முக்கிய நெடுஞ்சாலைகளைக் கடக்கக்கூடும்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் 489 ஹெக்டர் பரப்பளவிலான பழைய சுரங்க குளங்கள் ஓ.ஆர்.எஸ். திட்டத்தில் சேமிப்பிற்காக அடையாளங் காணப்பட்டுள்ளன. அதில் செப்பாங்–பெட்டாலிங் பகுதியில் அமைந்துள்ள 185 ஹெக்டர் பரப்பளவிலான குளமும் அடங்கும். மலேசியாவிலேயே மிகப்பெரிய ஓ.ஆர்.எஸ் பகுதிகளான இது மேம்பாட்டு பணிகளுக்கு மட்டுமே இரண்டரையிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். நதி நீர் மாசுபடும் வேளையில், மூலநீர் பம்ப் நதியிலிருந்து மூலநீரை எடுப்பதை நிறுத்திக் கொண்டு, ஓ.ஆர்.எஸ்-யிலிருந்தது மூலநீரை எடுத்துக் கொள்ளும். கிள்ளான் நதியின் நீரின் தரத்தின் முன்னேற்றத்தால், இந்நதி மூலநீருக்கும் ஆதாரமாகும். இந்த ஓ.ஆர்.எஸ். குளங்கள் கிள்ளான் நதியிலிருந்து மட்டுமில்லாமல், அயிர் ஹீதாம் மற்றும் ராசாவ் நதிகளிலிருந்து கிடைக்கப்பெறும் மூலநீரை சேமித்துக்கொள்ளும்.

ராசாவ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் புதிய நீர் விநியோகம்

ராசாவ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முதல் கட்டப் பணி 2024ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் வேளையில் Pulau Indah, Zon Bebas Pelabuhan Klang (PKFZ), Pulau Ketam, Taman Bukit Lipat Kajang, Seksyen 16, Kawasan Perindustrian Bukit Rajah – Pelabuhan Utara, Bukit Tinggi & Botanik, Bandar Puteri & Putera 2, Taman Sri Andalas, Taman Sentosa, Bayu Perdana, Bandar Klang, Teluk Gedung, Persiaran Raja Muda Musa, Sobena Jaya, Pandamaran, Jalan Tengku Badar-யிலிருந்து Sijangkang (Kuala Langat) வரை நாள் ஒன்றுக்கு 700 மில்லியன் லிட்டர் நீரை (MLD) விநியோகிக்க இயலும். கிள்ளான் மற்றும் பெட்டாலிங் பகுதிகளுக்கு சிறப்பான நீர் சேவையை வழங்க, இரண்டாம் கட்ட ராசாவ் நீர் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிக்க ஆயர் சிலாங்கூர் திட்டமிட்டு வருகின்றது. மொத்தமாக ராசாவ் நீர் சுத்திகரிப்பு நிலையம் 1,400 மில்லியன் லிட்டர் நீரை 2028ஆம் ஆண்டு தரவல்லது.

தற்போது, கட்டுமான பணிகளுக்கான வேலைகள் நடந்து வருகின்றது. இதில் நிலகணக்கெடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள், திட்ட இடர் கணக்கெடுப்புகள், குழாய் திட்டமிடல் மற்றும் நிலம் கையகப்படுத்தும் செயல்முறைகள் ஆகியவை இதில் அடங்கும். இதே வேளையில், ஆயர் சிலாங்கூரின் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி கோருகிறது. இந்த திட்டம் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக, சிலாங்கூர் மாநில அரசு மூலம் ஆயர் சிலாங்கூர் நிலம் கையகப்படுத்தல் தொடர்பான விஷயங்களை கண்காணிக்கவும் ஒப்புதலை அனுமதிக்கவும் ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளது மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆதரவை தற்போதைய சுற்றுச்சூழல் ஆய்வுகளில் கவனம் செலுத்த வேண்டிய நோக்கம் குறித்த ஆலோசனைகளை வழங்கவதைப்பற்றி பெற்றுள்ளது.

தற்போது, ​​ரசாவ் நிலை 1 இன் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்திற்கான கொள்முதல் செயல்முறை நடந்து வருகிறது. ஏலதாரர்கள் தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க தகுதிக்கு முந்தைய-சுற்றில் பங்கேற்க வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது. ஏலச்சீட்டு செயல்முறை முடிந்ததும், ஆயர் சிலாங்கூர் நவம்பர் 2021இல் முதல் இரண்டு பணி தொகுப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராசாவ்வின் மிகப்பெரிய நதியோர நீர் தேக்க திட்டம் (ஓ.ஆர்.எஸ்.)

பயனீட்டாளர்கள் மீதான நேர்மறை விளைவு

இந்த ரசாவ் நீர் விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படாவிட்டால், கிள்ளான் வட்டாரத்திற்கான நீர் கையிருப்பு 2024ஆம் ஆண்டிற்குள் 1.9 விழுக்காடாகக் குறையும் என நம்பப்படுகின்றது. ஆனால், இந்த நீர் விநியோக நிலையம் நிறுவப்பட்டால் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய மாநிலங்களுக்கு நீர் கையிருப்பு 15  விழுக்காடாக உயர்ந்து 2024-ஆம் ஆண்டு கிள்ளான் பகுதிகளில் மொத்த கையிருப்பு 20.9% விழுக்காடாக இருக்கும்.

அதே நேரத்தில், நீர் விநியோகம் சிலாங்கூர் நதி திட்டமான சுங்கை சிலாங்கூர் 1,2 மற்றும்  3ஆம் கட்ட சுத்திகரிப்பு மையத்திலேயே சார்ந்து இருக்காது. ஏனென்றால், ராசாவ் நீர் விநியோகத் திட்டத்தால் கிள்ளானில் இருக்கும் பயனீட்டாளர்களுக்கு  60%க்கும் அதிகமான சுத்தமான மற்றும் பாதுகாப்பான நீர் விநியோகத்தை வழங்க முடியும், மீதமுள்ளவை சுங்கை சிலாங்கூர் நீர் வழங்கல் திட்ட சுத்திகரிப்பு மையத்தின் மூலத்திலிருந்து அனுப்பப்படும்.

அதுமட்டுமன்றி வெகு விரைவில் ராசாவ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முதல் கட்ட நிர்மாணிப்புப் பணிகள் நிறைவடைந்தப்பின் சிலாங்கூர் நதித்திட்டத்தில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டால் கிள்ளான் பகுதிகளுக்கு மாற்று வழியாக இங்கிருந்து நீர் விநியோகம் செய்ய முடியும். ஏனெனில் இந்தப் புதிய திட்டத்திலிருந்து நீரை விநியோகிக்க குழாய்கள் உள்ளன. ஒரு நாளைக்கு ஒரு பயனீட்டாளர் 1,500 லிட்டர் நீர் உபயோகிக்கிறார் எனில் ரசாவ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தால் 467,000 பயனீட்டாளர்களுக்கு நீர் விநியோகிக்க முடியும்.

நீர்த்துறைக்கென நிலையான எதிர்காலம்

தற்போதுள்ள சவால்களை எதிர்த்துப் போராடும் அதே சமயம் எதிர்காலங்களில் எதிர்பாராவிதமாக ஏற்படக்கூடும் சவால்களையும் எதிர்கொள்ள ஆயர் சிலாங்கூர் புதிய முயற்சிகளை ஆராய்ந்து, அதற்கு ஆயத்தமாகி வருகிறது. ஆயர் சிலாங்கூர் இப்பகுதியில் மிகப்பெரிய நதியோர நீர்த்தேக்க வசதிகளை உருவாக்குவதற்கான பயணத்தைத் தொடங்குகையில், எதிர்காலத்தில் ஒருநிலையான நீர்தொழிற்துறையை உருவாக்க மற்றும் விநியோகிக்க, அனைத்து நீர் ஆபரேட்டர்களுடனும் இந்த திட்டத்தினை பகிர்ந்து கொள்வோம் என்று நம்புகிறோம். கிள்ளான் நதியை கொண்டு, புதிய மூலநீரை நாங்கள் சுத்தமான மற்றும் சுகாதாரமான நீரை விநியோகிக்கும் நேக்கத்திற்கு ஒவ்வொருவரும் நதியைப் பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் ஒரு பங்கைக் கொண்டிருக்க வேண்டும். மக்களின் நலனுக்காக நதிகள் பயன்படுவது, குறிப்பாக ‘River of Life’ எனும் கிள்ளான் ஆற்றின் மீட்புதிட்டம் அப்பகுதி மக்களுக்கு நன்மை அளிக்கும் நோக்கத்துடன்  அமைந்துள்ளது. இது நாடு, மக்கள் மற்றும் நம் அனைவரின் எதிர்காலத்திற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கு நிச்சயமாக உதவும்.

#நம்நீரைக்காப்போம்#ProtectOurWater

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here