இனம் வாழ மொழி காக்க வேண்டும்

பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் பதிவோம் 

 இன்னும் இருப்பது  57 நாட்கள் மட்டுமே

கவின்மலர்

ஓர் இனம் வாழ வேண்டுமானால் அதன் தாய்மொழி வாழ வேண்டும்.அதனை அம்மொழியைத் தாய் மொழியாக கொண்டவர்கள்  அம்மொழியைக் காக்கவும் வளர்க்கவும் அன்றாட வாழ்க்கையில் வழங்கவும் வேண்டும்.வழக்கற்ற மொழிகள் வாழ்விழந்துப் போகும் என்பது மட்டுமல்ல.இல்லாமல் அழிந்தும் போகும் என்பதற்கு உலகில் தோன்றி மறைந்த எண்ணற்ற மொழிகளே சான்றாகும். மொழி அழிய இனம் அழியும் என்பது வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடமாகும். கீழ்பேரா தமிழ்ப்பள்ளிகளின் மேனாள் கண்கானிப்பாளரும் தெலுக் இந்தான் நடேசப்பிள்ளை தமிழ்ப்பள்ளியின் மேனாள் தலைமையாசிரியருமான கதிர்காமன் முத்தையா கருத்துரைத்தார்.

தாய் மொழிந்த மொழி, தாய்மொழி.  தாய்மொழி வழி கல்வியே சிறப்பு. இதற்கு; உளவியலும் அறிவியலும் சான்று பகிர்கின்றன. தாய்மொழி தெரிந்தால் அதன் வழி பிறமொழிகளை எளிதில் கற்கலாம். “வேண்டுமென்றால் பலா வேரிலும் காய்க்கும்; வேண்டாமென்றால் கொம்பிலும் காய்க்காது’. நம் தாய்மொழியான தமிழை காப்பது அனைவரின் கடமை. தமிழ்ப் பள்ளிகள் வழியே நம் தாய்மொழியை காப்போம்; பேணுவோம். என் இரு பிள்ளைகள் மூத்த மகள் குமுதமலர் கதிர்காமன், இளங்கலை (சமூக அறிவியல் ) முதுகலை: நிர்வாகத்துறை.  இரண்டாவது மலர்மொழி கதிர்காமன், இளங்கலை (தகவல் தொழில்நுட்பம்), முதுகலை: வியாபார நிர்வாகத்துறையிலும் படித்து பணியில் இருக்கின்றனர்.இவர்கள் இருவருமே எஸ்பிஎம் தேர்வில் தமிழில் ஏ+,தமிழ் இலக்கியத்தில் ஏ பெற்றனர்.என் துணைவியார் குடும்ப மாதாக இருந்து குடும்பத்தில் தமிழ் வாழ துணை செய்கிறார்.

  • மொழியும் இனமும் நமதிரு விழிகள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here