தமிழ் தமிழர்களின் நெற்றிக்கண்

கவின்மலர்

விந்தையிலும் விந்தையான விஞ்ஞான படைப்புகளை உருவாகலாம். ஆனால், பண்பட்ட மனிதனாக, மனித உணர்வு மிளிரும் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை உலகுக்கு சொல்லித் தருவது தமிழ். எவ்வுயிரையும் தன்னுயிர்போல் நேசிக்கும் பண்பு; யாதும் ஊரே, யாவரும் கேளிர்; எவ்வினத்தையும், எம்மதத்தையும் கிஞ்சிற்றும் கீழ்நோக்கிப் பார்க்காத பண்பு; நாம் வாழும் இந்த உலகத்தை உயிரேபோல் நேசித்துப் பாதுகாக்கும் உயர் எண்ணம்; ஜீவகாருண்யம்; தான்கெடினும் தக்கார்க்கு கேடு எண்ணாமை போன்ற உய்விக்கும் உயர் எண்ணங்கள், உயர்சிந்தனைகள், தமிழரின் உலகப் பார்வை,தமிழ்மொழியிலுள்ள இறைச்சிந்தனைதான். அதில் பொதிந்துள்ள அறிவு வளமும், மறைந்துள்ள மந்திரமும்தான். இந்த உண்மை மேலும் மெருகேறியது….மலாயா பல்கலைக் கழகத்தில், தமிழ்ப்படித்து பட்டம் பெற்றதுதான். ஆங்கிலமும், மலாய் மொழியும் எனக்கு இரு கண்களைப்போல். ஆனால், * தமிழ் எனக்கு நெற்றிக் கண்* என் சிந்தனை, அறிவு, ஆற்றல், செயல்பாடு அனைத்துக்கும் வித்து..தமிழ் மொழியேயாகும். என்று எத்தனைப் பட்டங்கள் பதவிகள் அலங்கரித்த போதும் தம்மைத் தமிழ்ப் பள்ளி மாணவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்ளும் பினாங்கு மாநில காவல்துறையின் முன்னாள் தலைவர் ( கமிஷனர் ) டத்தோஸ்ரீ தெய்வீகன் தெரிவித்தார்.

கடந்த 2012 முதல் 2015 வரை, துணைத்தலைவராகவும், பின்னர் 2017 முதல்  ஜனவரி 2019வரை தலைமை கமிஷனராகவும், பணியாற்றி, இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தவர், தமிழ் நெஞ்சர் டத்தோஸ்ரீ தெய்வீகன்.  புக்கிட் அமானில், கம்யூனிஸ்ட் பயங்கரவாத ஒழிப்பு பிரிவில் பணியாற்றியபின், வர்த்தக குற்றவியல், கடும் குற்றத்தடுப்புத் துறை, செந்தூல் மாவட்ட ஓசிபிடி, கெடா மாநில காவல் துறைத் துணைத்தலவர்; சரவாக் மாநில காவல் துறை நிர்வாகத் தலைவர், சிலாங்கூர் மாநில துணைத்தலைவர்; புக்கிட் அமான் வர்த்தகக் குற்ற விசாரணை துறைத் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 25.3.1807ல்,  மலேசியக் காவல்துறை சரித்திரம் தொடங்கிய அதே பினாங்கு மாநிலத்தில், 2017ல், தலைவராகப் பொறுப்பேற்றது பெருமைக்குறியது.

காவல்துறையில் இருக்கும்போதே அவர் பல்வேறு தமிழ், தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தார். மேடைகளில், மக்கள் ரசிக்கும் வண்ணம்,  இலக்கிய உரையாற்றுவார். கவிப் பேரரசு வைரமுத்துவே, இவரது தமிழ் இலக்கியப் பேச்சைக் கேட்டு, நீங்கள் காவல் துறையை விட்டுவிட்டு, கவிஞர்களாகிய எங்களோடு சேர்ந்துவிடுங்கள் என்றார். இச்செய்தியை, இளையத் தமிழவேள்ஆதி குமணன் தலையங்கமாகவே எழுதினார்.

நாடு முழுவதும் தமிழ்ப் பள்ளிகள், இளைஞர்கள் தன்னம்பிக்கை, ஊக்குவிப்பு, தமிழ்ப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள்;  ஆலயங்களில் சமய சொற்பொழிவுகள் என்று தனது தமிழ்ச்சேவைகளை ஆற்றியுள்ளார். *வன்முறை வேண்டாம் தம்பி* என்ற தமிழ் புத்தகமும், இளைஞர்களுக்காக எழுதி வெளியிட்டுள்ளார். பத்தாயிரம் பிரதிகளை இலவசமாக மாணவர்களுக்கும் வழங்கியுள்ளார். பிரத்தியேகமான நிகழ்ச்சிகளின் வழி தமிழ்ச் சான்றோர்கள், கல்விமான்கள், மற்றும் தமிழ்க்கவிஞர்களுக்கு சிறப்பு செய்துள்ளார். இத்தனை பெருமைகளையும் எனக்குத் தேடித் தந்தது என் தநதையாரும் ஆசிரியர் பெருமக்களும் ஊட்டி வளர்த்த தமிழுணர்வு என்று தெய்வீகன் வலியுறுத்தினார்.

என் மனைவி கோமதி தனராஜ், ஒரு தமிழ்ப் பள்ளி மாணவி. கெடா, சுங்கைப் பட்டாணி, பீடோங், தோட்டப்புறப் பட்டதாரிப் பெண். மானைப்போலிருக்கும் இன்னொரு தமிழ்ப் புலி. மலாயாப் பல்கலைக்கழக பட்டதாரி. இங்கிலாந்தில் M.A.(Library Studies). மலாயாப் பல்கலைக்கழக நூலகத்தில், தமிழ்ப் பிரிவுக்குத் தலைவராகப் பணியாற்றியவர். நான்கு குழந்தைகள்.  ஆண்கள் மூவர். ஒரு பெண். அனைவரும் தமிழ்ப்பள்ளி. பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி. மாணவர்கள்.இரண்டு டாக்டர்கள். இரண்டு பொறியியலாளர்கள் என்ற பொறுப்புகளில் அமர்ந்து தமிழ்ப்பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here