மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் காலமானார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின், மூத்த சகோதரர், முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர். 104 வயதான இவர், ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.
கலாமின் பிறந்தநாள், நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர், தவறாமல் சென்று மரியாதை செலுத்துவதுடன், சிறப்பு பிரார்த்தனைகளிலும் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.