மக்கள் ஓசை நிர்வாகம் பினாங்கு துணை முதல்வருடன் சந்திப்பு

சமூகநல செய்திகளையும், நாட்டில் நிலவரங்களையும் அவ்வப்போது பிரசுரித்து வரும் மக்கள் ஓசை நிர்வாகத்தைப் பேராசிரியர் இராமசாமி வெகுவாகப் பாராட்டினார்.

 

ஜார்ஜ்டவுன்-

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியுடன் மக்கள் ஓசை குழுமத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் மரியாதை நிமித்தமாகச் சந்திப்பு நடத்தப்பட்டது.

மக்கள் ஓசை குழுமத் தலைவர் கோபாலகிருஷணன், ஓசை ஆசிரியர் .பி.ஆர்.இராஜன், செபராங் பிறை மாநர் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல், மக்கள் ஓசையின் நடவடிக்கை செயல்முறை நிர்வாகி கோபாலகிருஷணன், பினாங்கு மாநில செய்தியாளர் செ.குணாளன் பேராசிரியர் இராமசாமியுடனான சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.

பினாங்கு மாநில துணை முதல்வருடனான இந்தச் சந்திப்பில், நாட்டு நடப்பு, நாட்டின் அரசியல் நிலவரம், இந்தியச் சமுதாயத்தின் எதிர்காலம், சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகநல செய்திகளையும், நாட்டில் நிலவரங்களையும் அவ்வப்போது பிரசுரித்து வரும் மக்கள் ஓசை நிர்வாகத்தைப் பேராசிரியர் இராமசாமி வெகுவாகப் பாராட்டினார்.

பினாங்கு மாநில அளவில் மட்டுமல்லாமல் நாடுத் தழுவிய நிலையிலிருந்து தேடி வருபவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் பேராசிரியரின் சிறந்த செயல்திறனுக்கு நாட்டு மக்கள் நன்றி பாராட்டுகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருப்பதாக மக்கள் ஓசை குழுமத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.

அதே வேளையில் பேராசிரியர் இராமசாமியுடனான கலந்துரையாடலில் அவருக்கு நன்றி பாராட்டினார். பினாங்கு மாநிலத்தின் மக்கள் ஓசை வளர்ச்சி தொடர்பாகவும் பேராசிரியர் இராமசாமியுடன் கலந்துரையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் மக்கள் ஓசை நாளிதழ், மக்களின் பிரச்சினைகளையும் தொடர்ந்து பிரசுரிப்பதுடன், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் செய்தியைச் சிறப்புச் செய்திகளாகத் தொடர்ந்து பிரசுரிக்க வேண்டும் என்று பேராசிரியர் இராமசாமி கேட்டுக்கொண்டார்.

செ.குணாளன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here