–குஜராத்தில் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சபர்மதி ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
75- ஆவது சுதந்திர தினம் 2022 இல் கொண்டாடப்பட உள்ளது. அந்தக் கொண்டாட்டத்தின் துவக்க விழா, குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இன்று துவங்குகிறது.
நாட்டின் 75 இடங்களில், 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. அதைத் தவிர, சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டிக்கு 21 நாட்கள் நடைப் பயண இயக்கத்தையும் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
நாட்டின் 75- ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் எம்.பி.க்களும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.