-உயிர்போன பரிதாபம்.!
ஸ்கை டைவிங் போட்டியில் கலந்துகொண்ட வீரர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்கை டைவிங் போட்டி நடைபெற்றுள்ளது. இதுவரை 6000 ஸ்கை டைவிங்யை வெற்றிகரமாக முடித்த 30 வயதான வீரர் இந்த போட்டியிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜூரியன்பே பகுதியின் மீது ஸ்கை டைவிங் செய்வதற்க்காக விமானத்திலிருந்து குதித்துள்ளார்.
அச்சமயம் அவருடைய பாராஜூட் திறக்காததால் அந்த வீரர் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த மரணம் குறித்து உள்ளூர் காவல் துறையினர் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு ஆணையம் , ஆஸ்திரேலியா பாராசூட் கூட்டமைப்பு ஆகியவை இந்த மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.