– மோடிக்கு, பூடான் பிரதமர் நன்றி
அந்த வகையில் முதல் நாடாக பூடானுக்கு கடந்த ஜனவரி மாதம் 1.5 லட்சம் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.
இந்தநிலையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி வழங்கும் வகையில் கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை வழங்கும்படி பூடான் இந்தியாவைக் கேட்டுக்கொண்டது. அதன்படி 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் பூடானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனை பூடானுக்கான இந்திய தூதர் ருச்சிரா கம்போஜ் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி டாண்டி டோர்ஜியிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில் கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “கூடுதலாக 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பெறுவதில் மகிழ்ச்சி. இது எங்கள் தடுப்பூசித் திட்டத்தை நாடு தழுவிய அளவில் சாத்தியமாக்கும். பூடான் மக்களும், நானும் பிரதமர் மோடிக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.