செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம்

–  வெற்றிகரமாக தரையிறக்கியது நாசா

அமெரிக்காவின் நாசா, சேவ்வாய் கோளின் மேற்பரப்பில் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற ரோபாட்டை வெற்றிகரமாக தரையிறக்கி உள்ளது.

இந்த பெர்சவரன்ஸ் ரோபாட் ஜெசெரா என்று கூறப்படும் செவ்வாயின் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் உள்ள பள்ளத்தில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது.

அக்கோளில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நீருடன் கூடிய பெரிய ஆறு ஒன்று இருந்தாக கருதப்படுவதை அடுத்து, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அங்கு உயிரினங்கள் வாழ்வந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற அடிப்படையில் ஆதாரங்களை தேடவிருக்கிறது.

பெர்சவரன்ஸ் ரோவர் பிப்ரவரி 18- ஆம் தேதி இரவு நேரப்படி வெற்றிகரமாக தரையிறங்கியதை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நாசா நிறுவனம்.

தரையிறங்கிய மிக குறைந்த நேரத்திலேயே செவ்வாய் கோளின் இரண்டு படங்களை அனுப்பியது பெர்சவரன்ஸ்.

பெர்சவரன்ஸ் விண்கலத்தின் செயல் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைமையாக இருந்து செயல்பட்ட ஸ்வாதி மேனன் அமெரிக்க வாழ் இந்தியர் என்பது கூடுதல் சிறப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here