கோலாலம்பூர்: கடந்த ஆண்டு மார்ச் 18 முதல் கோவிட் -19 கடமைகளில் காவல்துறையினரை நிறுத்தியதால் தொற்றினை குறைக்க உதவி இருக்கிறது. ஆனால் பிற குற்றப் போக்குகளுக்கு வழிவகுத்ததாக டான் ஸ்ரீ அப்துல் ஹமீத் படோர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கோவிட் -19 கடமையில் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் இருப்பது குற்றவாளிகளை அச்சுறுத்தியதாக போலீஸ் படைத்தலைவர் தெரிவித்தார். நூற்றுக்கணக்கான சாலைத் தடைகளை அமைப்பதும் குற்றவாளிகளுக்கு சுதந்திரமாக செல்வதை கடினமாக்குகிறது.
இத்தகைய நேர்மறையான தாக்கம் வழக்கமான குற்றங்களைக் குறைக்க வழிவகுத்தது. ஆனால் வழக்கத்திற்கு மாறான குற்றங்கள் அதிகரித்துள்ளன.
உடலுறவு வழக்குகள், சிறுவர் ஆபாச படங்கள், இணைய கொடுமைப்படுத்துதல், ஆன்லைன் மோசடி மற்றும் தற்கொலை ஆகியவை வழக்கத்திற்கு மாறான குற்றங்களில் அடங்கும். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் வெட்கப்படுவதால் அல்லது அறிக்கை அளிக்க பயப்படுவதால் அதைக் கட்டுப்படுத்துவது கடினம் என்று அவர் 214 ஆவது போலீஸ் தின கொண்டாடத்தின் போது கூறினார். இந்த நிகழ்வை பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் அதிகாரப்பூர்வமாக நடத்தினார்.