சோகத்தில் முடிந்த பிறந்தநாள் விழா..

ஸ்ப்ரே அடிக்கும் போது நடந்த அதிர்ச்சி

ஓர் இளைஞரின் பிறந்தநாள் விழாவில் ஸ்பரே ஃபோம் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது..

அந்த வீடியோவில், பிறந்த நாள் விழா ஒன்றில் அந்த இளைஞர் கேக் வெட்டப் போகிறார், அவரது நண்பர்கள் அவர் மீது ஸ்ப்ரே ஃபோமை தெளித்தார்கள்.

இதனையடுத்து அவரது முகத்தில் தீப்பிடித்ததால், அவர் உதவிக்காக ஓடத் தொடங்கினார். பின்னர், அவரது நண்பர்கள் அவரது முகத்தில் இருந்த தீப்பிழம்புகளை அணைக்க முயன்றனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த வீடியோவை ஸ்ப்ரே நுரைகளைப் பயன்படுத்துவதை எதிர்த்து இன்ஸ்டாகிராமில் புனெட்ராவெக்ஸ் என்ற பக்கத்தில் வெளியிட்டது. மேலும் ” ஸ்பேரே நுரை கண்ணுக்கு நல்லதல்ல ரசாயனங்களைக் கொண்டுள்ளது – இது ஒரு கண் எரிச்சலாக மாறும்.

இது எளிதில் தீப்பற்றக் கூடியது மேலும் பெரும்பாலான பாட்டில்கள் எச்சரிக்கை அறிகுறிகளுடன் வருகின்றன, இதனை மக்கள் பயன்படுத்த வேண்டாம்..” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் விருந்துகளில், குறிப்பாக பிறந்தநாள் விழாக்களில் ஸ்ப்ரே தெளித்து விளையாடுவதை அதிகமாக பார்க்க முடிகிறது..

ஆனால்,. ஸ்ப்ரேக்களில் அதிக அழற்சி கொண்ட இரசாயனங்கள் இருப்பதால் அவை ஆபத்தானவை. எனவே, அதை தீ அருகே தெளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here