முதல் மனைவி உடைந்ததால் அவர் என்ன செய்துள்ளார் தெரியுமா?


-பொம்மைகளை மட்டும் தான் திருமணம் செய்வேன்”

தற்போது உள்ள காலகட்டத்தில் எப்படியாவது திருமணம் நடந்து விடாதா என ஏங்கி கொண்டிருபவர்கள் 90’s kids, ஆனால் அவர்களையே ஆச்சர்யத்தில் உறைய வைத்தவர்தான் யூரி என்ற நபர். அப்படி அவர் என்ன செய்துள்ளார் தெரியுமா?

யூரி டோலோச்கோ, என்ற நபர் ஒருவர் செக்ஸ் பொம்மைகளை திருமணம் செய்து வைரலாகி வருகிறார். கஜஸ்கானை சேர்ந்த இவர் மார்கோ என்ற பொம்மையை முதலில் திருமணம் செய்திருந்த நிலையில் சிறிது நாட்களில் அந்த பொம்மை உடைந்து விட்டது. இதனையடுத்து, தனியாக வாழ்ந்து வந்த யூரி தற்போது மீண்டும் கோலா என்ற பொம்மையை 2 ஆவதாக திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், தனது இரண்டாவது மனைவியான கோலா பொம்மையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் யூரி, முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாகக் கூறுகிறார்.

இவர் தனது முதல் மனைவியான மார்கோ என்ற பொம்மையை, பாலியல் உறவுக்காக அதிகம் பயன்படுத்தியதில் அது உடைந்துள்ளது. அதனால் அதை பழுது பார்க்க வேண்டி இருந்ததாகவும் அப்போது தனக்கென யாரும் இல்லாமல் தவித்ததில், அவர்களது திருமண வாழ்க்கை மோசமானதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, தன்னால் இனி தனியாக வாழ முடியாது என முடிவு செய்த யூரி, மார்கோவை விவாகரத்து செய்து புதிய பொம்மையை திருமணம் செய்துள்ளார். தனது இரண்டாவது திருமணத்தை குறித்து, யூரி தன்னை இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் 1,00,000 பேருக்கும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது இரண்டாவது மனைவியை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்திய யூரி அந்த பொம்மையின் உடல் பாகங்களை வர்ணித்தது மட்டும் இல்லாமல் தனக்கு பொம்மைகள் மீது மட்டும் தான் ஈர்ப்பு இருப்தாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here