கெடா உலக மவாஷி கிரி கராத்தே அகாடமி 16 பதக்கங்கள் வென்றது
அலோஸ்டார்-
இணையம் வழி ஈரானில் நடைபெற்ற 7ஆவது அனைத்துலக இ-காத்தா கராத்தே மாஸ்டர் கப் சம்பியன் ஷிப் பொதுப்போட்டியில் மலேசியா 16 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளதாக கெடா மாநில உலக மவாஷி கிரி கராத்தே அகாகடமியின் தலைவரும் அதன் தலைமை பயிற்றுனருமான சுரேஸ் மாரியப்பன் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 24 முதல் 26 வரை ஈரானில் 7ஆவது அனைத்துலகப் பொது கராத்தே மாஸ்டர் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இணையம் வழி நடத்தப்பட்ட இப்போட்டியில் 20 நாடுகளிலிருந்து 1400 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
கெடா மாநில உலக மவாஷி கிரி கராத்தே அகாடமியில் பயிற்சி பெற்று வரும் 16 போட்டியாளர்கள் மலேசியாவை பிரதிநிதித்து இப்போட்டியில் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் கெடா கோலமூடா, அலோர்ஸ்டார் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாவர்.
அனைத்துலக நாடுகள் ஏற்பாடு செய்த பல போட்டியில் கலந்துக்கொண்டுள்ள கெடா மாநில உலக மவாஷி கிரி கராத்தே அகாடமி போட்டியாளர்கள் முதல் முறையாக ஈரானில் நடைபெற்ற போட்டியில் கலந்துக்கொண்டுள்ளனர்.
அப்படி கலந்துகொண்டுள்ள போட்டிகளில் முதல் முறையாக 3 தங்கம், 3 வெள்ளி , 10 வெண்கலப் பதக்கங்கள் என்று 16 பதக்கங்களை வென்று மலேசியாவிற்கும் இம்மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டியில் கு. மனிஷா, உ. நவகஜேந்திரன், சு. யூத்தேஸ் குமரன் ஆகிய மூவரும் தங்கப்பதக்கங்கள் வென்றனர். சி. நிசால், வி. திருநேந்திரன், கஸ்தூரி மணியம் ஆகிய மூவரும் வெள்ளி பதக்கங்கள் வென்றனர்.
எஸ். காயத்திரி, என். ராவேன், பி. சத்தீஸ்வரி முதலியார், க.அஷ்னின் நாயுடு, சுமித்திரா குமரன், என். திலகவதி, மு. சுசேந்திரன் நாயுடு, பா. திவேத்தா, நிஷாஸ்ரீ குமரன், த. அவளிந்திரா ஆகியோர் வெண்கல பதக்கங்கள் வென்றனர்.
இவர்களில் கு. மனிஷா, என். திலகவதி, மு. சுசேந்திரன் நாயுடு, பா. திவேத்தா, நிஷாஸ்ரீ குமரன், த. அவளிந்திரா ஆகிய அறுவரும் கோலமூடா மாவட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களாவர்.
இக்குழுவினருக்கு நிர்வாகியாக சியான் சுரேஸ் மாரியப்பன், தலைமை பயிற்றுநராக டத்தோ விக்னேஸ்வரன், துணை பயிற்றுனராக லலிதா அம்பிகை இருந்து செயல்பட்டனர்.
கே. ஆர். மூர்த்தி










