வெட்டி, ஒட்டாமல்., அவரே சொன்ன சிறப்பான சம்பவம்.!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 3 மனைவிகள்., முதல் மனைவி மறைந்த பின் தயாளு என்பவரை திருமணம் செய்து கொண்ட கருணாநிதி, தயாளுக்கு தெரியாமல் மூன்றாவதாக ராசாத்தியை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து ஒரு விழாவில் கருணாநிதியே கூறியதாவது,
“1965ஆம் ஆண்டு எனக்கும் இங்கே அமர்ந்து இருக்கும் ராசாத்தி அம்மாளுக்கும் திருமணம் நடைபெற்று, நாங்கள் வாழ்க்கையை தொடங்கி இருந்தோம். ஆனால் இது ஊருக்கெல்லாம் தெரியும். என்னுடைய வீட்டுக்கு (3 ஆவது மனைவிக்கு) மட்டும் தெரியாது. அதாவது தயாளு அம்மாள்.
அறிஞர் அண்ணாவுக்குத் தெரியும். அவருடைய அனுமதி பெற்று தான் எனக்கும் ராசாத்திக்கும் திருமண விழா நடந்தது. அண்ணாவின் வாழ்த்தோடு தான் என்னுடைய திருமணம் நடைபெற்றது.
இது என்னுடைய மனைவி தயாளு அம்மாளுக்கும் தெரியாது. நான் மருத்துவமனையில் இருந்த செய்தி கேள்விப்பட்டு, என்னுடைய மனைவி ராஜாத்தி ஓடோடி வந்து, நான் தலையெல்லாம் ரத்தம் வழிய நான் படுத்து கிடக்க, என்னை சுற்றி மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்த காட்சியை பார்த்த ராசாத்தி, தலைவிரி கோலமாக ஐயோ என்று அலற.
அப்படி அலறிய காட்சியைப் பார்த்த, அங்கே இருந்த எனது மனைவி தயாளு, பக்கத்திலிருந்த மனோரமாவிடம், ‘யார் இது., ஏன் இப்படி அழுகிறார்’ என்று கேட்க, அப்போது தான் என்னை காட்டிக் கொடுத்து விட்டார் மனோரமா.
‘ஊரெல்லாம் தெரிந்த கதை உனக்கு தெரியாதா அம்மா. இவர்தான் ராசாத்தியம்மாள்’ என்று மனோரமா, தயாளு அம்மாளிடம் போட்டு உடைத்துவிட்டார். அது எந்த உணர்வுடன் சொல்லப்பட்டது என்று எனக்கு தெரியாது.
நாங்கள் பகிரங்கமாக இதை தெரிவித்து விட்டு இன்றளவும் குடும்பம் நடத்தி கனிமொழி என்ற ஒரு மகளை பெற்று உங்கள் வாழ்த்துக்களை கூறி பெருந்தொகையாக வளர்ந்திருக்கிறோம். ஆக மனோரமாவால் என் குடும்பத்தில் ஏற்பட்ட நன்மை இது.” என்று தெரிவித்துள்ளார்.