துக்கம் அனுசரிக்க வந்த மக்களை கொன்ற ராணுவம்..

மியான்மரில் தொடரும் கொடூரம்..!

மியான்மர் இராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்ட இளைஞரின் இறுதி சடங்கில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரின் வணிக தலைநகரான யாங்கோனிற்கு அருகில் இருக்கும் Bago என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று Thae Maung Maung என்ற 20 வயது இளைஞரை இராணுவம் சுட்டுக்கொன்றது.

இவரின் இறுதி சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்து கொண்டிருந்தபோது திடீரென பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்குள் நுழைந்தனர்.

அதன் பின்பு துக்கம் விசாரிக்க சென்ற மக்களை சராமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அங்கிருந்த மக்கள் பதறியடித்துகொண்டு ஓடியுள்ளனர். ஆனால் எத்தனை நபர்கள் கொலை செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. எனினும் வெவ்வேறு பகுதிகளில் சுமார் 12 நபர்கள் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதாவது கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதியில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தற்போது வரை குறைந்தபட்சம் சுமார் 459 நபர்களைச் சுட்டு கொன்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here