Home உலகம் மாணவர்களை தயார்ப்படுத்த கல்வி முக்கியம்

மாணவர்களை தயார்ப்படுத்த கல்வி முக்கியம்

புதிய உலகிற்கான தூர நோக்கு

கணி­னித் துறை­யில் ஆய்வு, கல்­விக்­காக சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு (என்­யு­எஸ்) உள்­ளூர் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான ‘சீ லிமிட்­டெட்’ $50 மில்­லி­யன் நன்­கொடை வழங்­கி­யுள்­ளது. இந்த நிகழ்ச்­சி­யில்  கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போது  வோங் இக்கருத்தை முன்­வைத்­தார்.

நியா­ய­மான, சம­மான சமு­தா­யம், பசு­மை­மிக்க, நீடித்து நிலைத்­து­ இருக்கக்­கூ­டிய தேசம், அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய, ஒற்­று­மை­யான சிங்­கப்­பூர் உள்­ளிட்ட இலக்­கு­களை எட்ட நாம் விரும்­பு­கி­றோம் எனக் குறிப்­பிட்ட அவர், அர­சாங்­கக் கொள்­கை­க­ளால் மட்­டும் இவற்றை எட்­டி­விட முடி­யாது என்­றார்.

தனி­யார் துறை­யும் இந்த முயற்சி­யில் ஈடு­பட வேண்­டும் என்ற அவர், சிங்­கப்­பூ­ரின் சமு­தா­ய­மும் பொரு­ளி­ய­லும் நீடித்து, நிலைத்­து இ­ருக்­கும் வகை­யில் தொழில் நிறு­வனங்­கள் தத்­தம் பங்­கை­யாற்ற வேண்­டும் .

புதி­ய­தொரு உல­கிற்கு சிங்­கப்­பூ­ரர்­க­ளைத் தயார்ப்­ப­டுத்­தும் முக்­கிய வழி­களில் ஒன்று கல்வி என்று குறிப்­பிட்ட  வோங், கொவிட்-19 சூழ­லில் தொழில்­நுட்ப மாற்­றத்­தின் வேகம் தொடர்ந்து தீவி­ர­ம­டை­வதைச் சுட்­டி­னார்.

“இன்­றைய, நாளைய தேவை­களைப் பூர்த்­தி­செய்ய ஏற்­கெ­னவே நடப்­பில் உள்ள கட்­ட­மைப்­பு­க­ளை­யும் செயல்­மு­றை­க­ளை­யும் மாற்­றி­ய­மைக்க நாங்­கள் மறு­யோ­சனை செய்து வரு­கி­றோம். மாண­வர்­களுக்குப் பரந்த அள­வி­லான திறன்­க­ளை­யும் செய­லாற்­ற­லை­யும் வழங்க நாங்­கள் கூடு­த­லா­ன­வற்றை செய்­கி­றோம்.

“அதே வேளை­யில், அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணிதம் ஆகிய துறை­களில் மாண­வர்­களின் ஆர்­வத்­தை­யும் ஆற்­ற­லை­யும் மேம்­ப­டுத்­து­வதை நாங்­கள் தொடர்ந்து உறுதி செய்­கி­றோம்.

“எனவே, தொழில்­து­றை­யில் அதி­க­ரித்து வரும் தேவை­க­ளை­யும் மாண­வர்­க­ளின் விருப்­பங்­க­ளை­யும் பூர்த்­தி­செய்ய பட்­டக்­கல்வி, பட்­ட­மேற்­ப­டிப்பு உட்­பட உயர்­கல்வி நிலை­யில் மாண­வர் சேர்க்­கை­யைத் தொடர்ந்து நாங்­கள் அதி­க­ரிப்­போம்,” என்று திரு வோங் விவ­ரித்­தார்.

இந்­நி­லை­யில், என்­யு­எ­ஸுக்கு ‘சீ’ நிறு­வ­னம் வழங்­கி­யுள்ள இந்த நன்­கொடை அப்­பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கணி­னிப் பள்­ளிக்­குச் செல்­லும்.

அப்­பள்­ளி­யில் ஏறக்­கு­றைய 4,200 மாண­வர்­கள் இள­நி­லைப் பட்­டக்­கல்­வி­யை­யும் 1,020 மாண­வர்­கள் முது­நிலை மற்­றும் முனை­வர் பட்­டம் பெற பயில்­கின்­ற­னர்.

இது­வரை நிறு­வ­னம் ஒன்­றி­டம்­ இருந்து என்­யு­எஸ் பெற்­றி­ருக்­கும் ஆகப்­பெ­ரிய நன்கொடை இதுவாகும்.

செயற்கை நுண்­ண­றிவு, தரவு அறி­வி­யல் போன்ற வேக­மாக வளர்ந்து வரும் முக்­கிய துறை­களில் ஆய்வு, கல்­வி­யில் பல்கலைக்­க­ழ­கத்­தின் முயற்சி­களுக்கு இந்த நன்­கொடை ஆத­ர­வ­ளிக்­கும் என்று என்­யு­எஸ் தலை­வர் டான் எங் சாய் கூறி­னார்.

‘சீ’ நிறு­வ­ன­ரும் அக்­கு­ழு­மத்­தின் தலைமை நிர்­வா­கி­யு­மான ஃபாரஸ்ட் லி, என்­யு­எ­ஸுக்­கும் தமது நிறு­வ­னத்­திற்­கும் இடை­யிலான நீண்­ட­கா­லப் பங்­கா­ளித்­து­வத்தை இந்த நன்­கொடை குறிப்­பதா­கச் சொன்­னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here