8000 பள்ளி மாணவிகளிடமிருந்து பாலியல் துஷ்பிரயோகப் புகார்கள்

பிரித்தானியாவை உலுக்கக்காத்திருக்கும்  பிரச்சினை…

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள், பாலியல் துஷ்பிரயோக கலாச்சாரத்தில் மூழ்கிக்கிடப்பதாக பகீர் புகார் ஒன்று பிரித்தானியாவை உலுக்கத் தயாராகிறது.

ஆசிய அமெரிக்கரான  சோமா சாரா (22), பிரித்தானிய பள்ளிகளில் படித்தவர்.

இவர் பாதி சீனர் என்பதால் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது அவரைப் பார்ப்பவர்கள் என்னுடன் வருகிறாயா, நீ அந்த ஆபாச நடிகையைப் போலவே இருக்கிறாய் என்று சொல்லி வம்பு செய்வதுண்டாம்.

கொரோனா ஊரடங்கின்போது சாரா  வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில், அவரது தோழிகள் பலர், சக மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கதைகளை அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, இதேபோல் பாதிக்கப்பட்டவர்களுக்காக Everyone’s Invited என்ற இணையதளத்தைத் தொடங்கி, தாங்கள் சந்தித்த கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்  சாரா.

ஒரே வாரத்தில் 300 பேர் தாங்கள் பாதிக்கப்பட்ட கதைகளை அந்த தளத்தில் பதிவேற்றம் செய்தார்கள்.

மாணவிகள் மட்டுமல்ல, மாணவர்களும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளான கதைகள் குவியத் தொடங்கின.

11 வயதேயான மாணவிகள் கூட, நிர்வாண படங்களைப் பகிர கட்டாயப்படுத்தப்பட்டது முதல், பார்ட்டிகளில் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு துஷ்பிராயோகம் செய்யப்பட்டது வரையிலான கதைகள் குவிந்தன.

பிரதமர் போரிஸ் ஜான்சனும், இளவரசர் வில்லியமும் படித்த பள்ளிகள் உட்பட, பிரித்தானியாவின் பிரபலமான 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இன்று வரை, 8,000 மாணவிகளிடமிருந்து பாலியல் புகார்கள் வந்துள்ளதாக பிரித்தானிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

சாராவுடன் இந்த புரட்சிகர திட்டத்தில் இணைந்திருப்பவர் கார் விபத்தில் பலியான Fast and the Furious நடிகரான Paul Walkerஇன் மகளான Meadow Walker.

ஒன்லைன் ஆபாச தளங்களும், தரம் குறைந்த பாலியல் கல்வியும்தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம் என்கிறார் Meadow Walker. ஆனால், சாராவோ பெண்களுக்கும் இதில் பங்கு உண்டு என்கிறார்.

கிம் கார்டேஷியன் போன்று அசாதாரண உடல்வாகைக் காட்டி, இளம்பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குபவர்களையும் சாடுகிறார் அவர்.

இதற்கிடையில், தங்கள் மகன் அல்லது மகள் இதுபோல் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானதாக தெரியவந்தால், புகாரளிக்க முன்வருமாறு பொலிசார் பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு பெரிய பூகம்பம் பிரித்தானியாவில் வெடிக்கப்போகிறது என்று மட்டும் இப்போதைக்கு கூறலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here