லாட்டரியில் விழுந்த பரிசு

-தெரியாமல் இருந்த பெண்

அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணிற்கு 32 700 டாலர்கள் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா நகரில் ஜெரிகா தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். தான் பணியாற்றும் அலுவலக நண்பர்களுடன் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அதன் பிறகு அவர் தன்னுடைய தினசரி வேலைகளைக் கவனித்து வந்த நிலையில் கடந்த வாரம் லாட்டரி டிக்கெட்டுக்கு பணம் விழுந்ததாக தெரியவந்தது.

 

மேலும் யாரோ ஒருவருக்கு 32700 டாலர்கள் பரிசு கிடைத்து விட்டது நமக்கு அதிஷ்டம் இல்லை என்று மனதை தேற்றி விட்டு தனது பணியை தொடங்கியுள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து எதேச்சையாக லொட்டோ செயலியில் பார்த்தபோது இந்த லாட்டரி ஜெரிகா தாமஸ்க்குத்தான் விழுந்தது என்பது தெரியவந்து அவருக்குத் தலை கால் புரியாமல் மகிழ்ச்சியில் உறைந்து போனார்.

 

அதன்பின்னர் அங்கு அவர்களுடன் பணியாற்றும் நண்பர்களிடம் தெரிவித்த போது அவர்கள் எவரும் நம்பவில்லை ஆகையால் லாட்டரி டிக்கெட்டில் பணம் விழுந்த ஆவணங்களை ஸ்கேன் செய்து அவர்களுக்கு காட்டியவுடன் நண்பர்கள் கூட்டம் அனைவரும் அதிர்ச்சியில் திகைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here