குழந்தை ஆணா? பெண்ணா?

 கண்டறிய ஆகாயத்தில் விபரீத முயற்சி

பிறப்பு பிறக்கப் போகும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருந்த தம்பதிகள் மேற்கொண்ட வினோதமான விமான சாகசம், இவ்விபத்தில் முடிந்து இரண்டு பேருடைய உயிர் பறிபோன சம்பவம் அரங்கேறியுள்ளது.

மெக்சிகோ நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் கரீபியன் கடலுக்கு அருகே உள்ள காயல் பகுதியில், பறந்த விமானம் பிங்க் நிற புகையை வானில் கக்கியது. இந்த விமானத்தை படகு ஒன்றில் இருந்தவாறு பெற்றோராக போகும் தம்பதியினர் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிங்க் நிற புகை வந்ததும் பெண் குழந்தை பிறக்கப் போவதாக தம்பதிகள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்த நிலையில், அடுத்த சில வினாடிகளில் சாகசம் செய்த விமானம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தின் பைலட்டும், அவருடன் சென்ற கோ பைலட்டும் பரிதாபமாக உயிரிழந்த சோகம் அரங்கேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here