கோவிட் தடுப்பூசி போட்டு கொண்ட ஆசிரியை மரணமா?

போர்ட்டிக்சன்: கோவிட் -19 தடுப்பூசி பெற்று இm ஆசிரியர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற கூற்றை போலீசார் நிராகரித்தனர். மாவட்ட காவல்துறைத் தலைவர்  எடி ஷாம் முகமது, ஏப்ரல் 2 ஆம் தேதி 54 வயதான பெண் ஊசி போட்டு இறந்ததாகக் கூறி வைரல் செய்தி போலியானது என்று கூறினார்.

இங்குள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகள் கடந்த ஆண்டு நீரிழிவு நோய், இதயம் தொடர்பான வியாதிகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நீண்டகால நோய்களால் ஆசிரியர் பாதிக்கப்பட்டுள்ளதைக் காட்டியது என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 1 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் உடல் நல கோளாறினால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மறுநாள் பிற்பகல் இறந்தார் என்று திங்களன்று (ஏப்ரல் 5) ஒரு அறிக்கையில்  எடி ஷாம் கூறினார். ஆசிரியர் மார்ச் 30 அன்று தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

ஆதாரமற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் அல்லது பொதுமக்களைக் குழப்பக்கூடிய சமூக ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று சுபிடி எடி ஷாம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1988 இன் பிரிவு 233 இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது RM50,000க்கு மிகாமல் அபராதம், ஒரு வருடம் தாண்டாத சிறைத்தண்டனை அல்லது இரு தண்டனையும் விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here