-இளவரசா் ஹம்ஸா விவகாரம்
ஜோா்டான் இளவரசா் ஹம்ஸா பின் ஹுசைன் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது குறித்த செய்திகளை வெளியிட சமூக மற்றும் பிறவகை ஊடகங்களுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டின் பேரில் ஜோா்டான் அரசு தன்னை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக இளவரசா் ஹம்ஸா சனிக்கிழமை தெரிவித்திருந்தாா்.
மேலும், மன்னா் இரண்டாம் அப்துல்லா குறித்து விமா்சனங்களையும் அவா் முன்வைத்தாா். இந்த நிலையில், இதுதொடா்பான செய்திகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.