இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தற்காலிக தடை

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா- பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவிப்பு

டெல்லி:
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்திருக்கிறது. வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலும் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று நியூசிலாந்து பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருவதால் நியூஸிலாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் அறிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மட்டும் ஒரே நாளில் 630 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,177 ஆக உயர்ந்திருக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,43,473 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொரொனா 2வது அலையின் தீவிரம் இந்தியாவில் இந்த அளவுக்கு இருப்பதை உணர்ந்தே, இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here