கொரோனாவால் 30- 39 வயதினரே அதிகம் பாதிப்பு

சென்னை: 

சென்னையில் கொரோனா வைரஸால் கடந்த ஆண்டு முதியவர்கள் அதிகம் பாதித்த நிலையில், இந்தாண்டு இளைஞர்கள் பெரும் அளவில் தொற்றுக்கு ஆளாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 30 முதல் 39 வயதினர் 20.14 சதவிகிதம் பேரும் 40 முதல் 49 வயதினர் 18.37 சதவிகிதம் பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதேபோல் 50 முதல் 59 வயதினர் 17 . 97 சதவிகிதமும், 60 முதல் 69 வயதினர் 11.13 சதவிகிதமும் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே 20 முதல் 29 வரையிலான வயதினர் 17.93 சதவிகிதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1 . 60 சதகிவிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் 59.71சதவீதம் பேரும், பெண்கள் 40.29சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here