சென்னை மெரினாவில் நடைப்பயிற்சி

பொதுமக்களைத் திருப்பி அனுப்பிய போலீஸ்

சென்னை

சென்னை மெரினா கடற்கரைக்கு நடைப் பயிற்சிக்கு வந்த பொதுமக்களை கொரோனா கட்டுப்பாடு காரணமாக காவல்துறை திருப்பி அனுப்பியது

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அளவில் கொரோனா பரவலில் நான்காம் இடத்தில் உள்ள தமிழகத்தில் சென்னை மாநகரம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு தினசரி பாதிப்பு 2000ஐ தாண்டி உள்ளது.

இதையொட்டி நேற்று முதல் கொரோனா கட்டுப்பாடு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக வார இறுதியில் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அறியாமல் பலர் நடைப்பயிற்சிக்கு வந்துள்ளனர்.

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி அவர்களை காவல்துறையினர் தடுத்துத் திருப்பி அனுப்பி உள்ளனர். இதையொட்டி நடைப் பயிற்சிக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here